Guru Peyarchi: தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியில் நிகழும் பிரகாசமான மாற்றம்.. ஒரு விஷயத்தில் கவனம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம் என மாற்றங்கள் நிகழக்கூடிய காலகட்டமாக இருக்கும். வாழ்க்கையில் வேறு ஒருவிதமான நல்ல மாற்றம் ஏற்படும். ரியாலிட்டியை நோக்கி செல்ல ஆரம்பிப்பீர்கள். திடீரென ஒரு நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பிரச்சனைகள்
இந்த காலகட்டத்தின் இரண்டாம் பாதியில் நன்றாக இருக்கும். யாரை நம்ப வேண்டும் என்பதில் கவனமாக இருப்பது நல்லது. இலக்கை நோக்கிக் கொண்டு சென்று கொண்டிருப்பீர்கள். அதை சுற்றி என்ன பின்விளைவுகள் இருக்கிறது என்று திரும்பி பார்ப்பதற்கு நேரமில்லாமல் சென்று கொண்டிருப்பீர்கள். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. ஆனால், பிரச்சனைகளை கடந்து செல்பவராக நீங்கள் இருப்பீர்கள்.
பணவரவு
இதை எதற்கு பேசிக் கொண்டு என்று அமைதியாக செல்வதால் ஒவ்வொன்றையும் விட்டுச் செல்வது போன்ற நிலை ஏற்படும். பிரச்சனைகள் அப்படியே இருந்து கொண்டே இருக்கும். ஆனால், தீர்வு கிடைக்காத நிலைமை இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். பணத்தை எண்ணி செலவு செய்யக்கூடிய காலகட்டமாகவும், கொஞ்சம் நெருக்கிக் கொண்டிருக்கும் நிலை இருக்கும்.
கடன் நீங்கும்
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நிம்மதி பெருமூச்சு விடக் கூடிய காலகட்டமாக இருக்கும். சொத்துகளை விற்பது, முடங்கியிருக்கும் பணம் வெளியில் வருவது, அடுத்த லெவலுக்கு செல்வது போன்ற யோகங்கள் உண்டாகும். கடனில் இருந்து வெளியில் வரும் வாய்ப்பு மே மாதம் முதல் ஏற்படும். சரியாக இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டால் கடனிலிருந்து ஒரு வருடத்தில் மீண்டு வரக்கூடிய அமைப்பு உள்ளது.
தொழில் யோகம்
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். கூட்டணியில் இருக்கலாமா, வேண்டாமா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு டீம் செட்டாகும். ஆனால், பார்ட்னர்ஷிப் என்பது செட்டாகாது. தனித்து தொழில் தொடங்கினாலும் உங்களுக்கு சரிவராது. வெளிநாடு போகக்கூடிய அமைப்பு மே மாதத்திற்குப் பிறகு உள்ளது. திருமணம், குழந்தை தொடர்பான வியங்களில் சிறிது தடை ஏற்படும்.
பொறுமை அவசியம்
ஜூன், ஜூலை மாதத்திற்குப் பிறகு சில மாற்றங்கள் ஏற்படும். புதிதாக யாரையாவது சந்திக்கும் நிலை ஏற்படும். குழந்தை பிறப்பு இந்த ஆண்டின் கடைசியில் இருந்து ஏற்படும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு இந்த ஆண்டின் கடைசி நல்ல காலகட்டமாக இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும். தனுசு ராசிக்கு எல்லாமே உடனடியாக நடக்க வேண்டும் என்கிற அவசர புத்தி இருக்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.
வழிபாடு
ஆரோக்கியத்தில், உணவுக் கட்டுப்பாட்டில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆலங்குடியில் இருக்கும் குரு ஸ்தலத்தில் சென்று வழிபாடு செய்வது அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications
