Guru Peyarchi: மகர ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. முயற்சியே மூலதனம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புதமான காலகட்டமாக இருக்கும். அசிங்கப்பட்டு, அவமானப்படக் கூடிய சூழல் ஏற்பட்டாலும் கூட அந்த விஷயத்தில் இருந்து தப்பிக்கும் சூழல் ஏற்படும். உங்களுக்கு தன்மானத்திற்குப் பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்து கொண்டே இருக்கும். வங்கியில் இருக்கும் பணத்தை அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பீர்கள். நம்மால் மற்றவர்களுக்கு பாரம் ஏற்பட்டு விடுமோ என்கிற எண்ணம் இருக்கும்.
கவனம்
மகர ராசிக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், வாழ்க்கை துணை விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளை விட்டு விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு சில மகர ராசியினர் சுய மரியாதை தொடர்பான விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நியாயத்தோடும், மரியாதையோடும் செயல்பட வேண்டும்.
தொழில் யோகம்
தொழில் தொடங்க முயற்சிப்பவர்கள் யாருடனாவது சேர்ந்து தொழில் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. கடன் அமைப்புகளில் இருந்து வெளியில் வரக்கூடிய சூழல் ஏற்படும். கடனை அடைக்கும் முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மன அழுத்தம் நீங்கும்
ஜூன் மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் மாதத்தில் எல்லாம் வாழ்க்கை நன்றாக அமையக்கூடிய வாய்ப்புள்ளது. மன அழுத்தங்களில் இருந்து விடுபடக் கூடிய காலகட்டம். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொத்துகள் வாங்குவதற்கான முதலீடுகள் குறித்து யோசிக்கலாம். இந்த வருடத்தின் கடைசிப் பகுதி சொத்துகள் வாங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும்.
வழிபாடு
மே மாதத்திற்குப் பிறகு நல்ல நிலைமை இருப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். எந்தவொரு விஷயத்துக்கும் பயப்படாமல், துணிந்து கால் வைப்பது நன்மை பயக்கும். முருகர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமியை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications