Guru Vakram: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. அள்ளிக் கொடுக்கும் குரு.. என்ஜாய்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக அடி மேல் அடி விழும் காலகட்டமாகவும், பல்வேறு பாதிப்புகளையும் சந்தித்திருப்பீர்கள். விரையத்தில் குரு இருக்கும்போது சந்தோஷம் உண்டாகும். ஆனால், 12 இல் அமரும்போது சோகமாக மாறும். இழந்துவிட்டாத நினைத்து, நினைத்து சோகமாக மாறியிருப்பீர்கள். குடும்ப சூழ்நிலை போன்றவற்றால் இழப்பு போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள்.
வாழ்க்கை மாறும்
ஆனால் இப்போது குரு வக்கிரமாகும் போது உங்கள் வாழ்க்கை கட்டாயமாக மாறும். இழந்ததை மீட்டெடுக்கும் யோகம் உண்டாகும். நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்டிருந்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிறைய பேருக்கு வேலை மாற்றம் உண்டாகும். நவம்பர் 11 முதல் மார்ச் 12க்குள் கட்டாயமாக சூப்பரான வேலை வாய்ப்புகள் வரும். ஒரு சிலருக்கு தொழில், துறையே மாறும் யோகம் உண்டு.
தொழில்
உற்பத்தித் துறையில் இருந்தவர்கள் திடீரென டிசைனிங் துறைக்கு மாறுவீர்கள். வெளியூருக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். புதிய புதிய வேலைகள் கிடைக்கும். இடமாற்றத்துக்கு முயற்சி செய்பவர்களுக்கு ஆன்சைட் யோகம் உண்டாகும். கனடா, அமெரிக்கா செல்லும் அதிர்ஷ்டம் தானாக வரும். குருவின் மூலமாாக வரும் வாய்ப்புகள், இடமாற்றம் உங்களுக்கு நிலைத்து நிற்கும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இனி அதுபோன்ற நிலைகள் எல்லாம் மாறும். அந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். படுத்த படுக்கையாக இருப்பவர்கள் கூட இனி எழுந்து நடக்க ஆரம்பிப்பீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். கொழுப்பை குறைக்கக்கூடிய ஸ்தானம் உண்டாகும். அதனால், உடல் எடையை குறைப்பீர்கள்.
மதிப்பெண்
நிம்மதியான காலகட்டம் உங்களுக்கு ஆரம்பிக்கிறீர்கள். சந்தோஷம் ரீதியாக 85 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதமும் நல்ல நன்மைகளைப் பெறுவீர்கள். நீங்கள் பெறும் சந்தோஷங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. அதனால் ரகசியம் காப்பது நல்லது. குருமார்களை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.
வழிபாடு, பரிகாரம்
ஸ்ரீரங்கம் சென்று வருவது, சங்கர மடம், ராகவேந்திர மடத்துக்குச் சென்று வருவது யோகத்தைக் கொடுக்கும். அங்கு ஒரு வேளைக்கான சாப்பாட்டுக்கு செலவை தானம் கொடுத்துவிட்டு, நீங்களும் சாப்பிட்டு வருவது நல்லது. அல்லது 4 பிராமணர்களுக்கு சாப்பாடு தானமாக அளிக்கலாம். இழந்ததை மீட்டெடுக்கும் யோகம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஆரம்பிக்கும் நேரமாக இருக்கும்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications