ஜனவரி மாத ராசி பலன் 2022 : இந்த 4 ராசிக்காரர்களும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்
ஜனவரி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், பார்வைகளைப் பொறுத்து மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: புத்தாண்டு பிறந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். நோய் தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. முதல் தேவை நல்ல ஆரோக்கியம்தான். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்வார். புதனும், சுக்கிரனும் வக்ர நிலையில் பயணம் செய்கின்றன. கும்ப ராசியில் குருவும், ரிஷபத்தில் ராகுவும் விருச்சிகத்தில் கேதுவும் பயணம் செய்கின்றன.
மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகளும் சில பாதிப்புகளும் கலந்த மாதமாக உள்ளது. எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று தனித்தனியாக பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பலன் குதூகலத்தை தரும். இந்த மாதத்தில் ஒன்பதில் குரு இருப்பதால் பாக்கியங்கள் அதிகரிக்கும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வேலை மாற்றம் இப்போதைக்கு வேண்டாம். இருக்கிற வேலையை தக்கவைத்துக்கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம். கோபத்தை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திருமண வரன் பார்ப்பதில் நேரம் சுமாராக இருப்பதால் அவசரப்படாமல் நிதானமாக கடைபிடிக்கவும். கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் புதிய முயற்சிகளுக்கு அதற்கேற்ப வெற்றிகள் கிடைக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் வரலாம். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. பொது இடங்களிலோ வீட்டிலோ வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை பேச வேண்டாம் வேலை செய்யும் இடத்தில் சிக்கலை ஏற்படுத்தி விடும். எந்த விசயத்திலும் விழிப்புணர்வு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்கள் முக்கிய முடிவுகள் இப்போதைக்கு எடுக்க வேண்டாம். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். அனுமனை வழிபட அற்புதங்கள் நடைபெறும்.

கடகம்
வேலையில் மாற்றம் வேண்டாம். அரசு வேலைக்காக தேர்வு எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு இது சரியான மாதமல்ல. இருக்கும் வேலையில் கவனம் தேவை. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கண்டச்சனி காலம் என்பதால் பொறுமை அவசியம். திருமணத்திற்காக வரன் பார்க்க இது சரியான மாதமல்ல. காதல் விவகாரங்கள் சிக்கலை உண்டு பண்ணும். சண்டை சச்சரவுகள் வந்து பிரிவுகளை ஏற்படுத்தலாம். வாகனம், வீடு, வாங்குவதில் பொறுமை தேவை. அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பெண்களுக்கு மன அழுத்தம் உடல் நல பாதிப்பு வரலாம் கவனம் தேவை. மாணவர்கள் பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. ஆசிரியர்கள் சொல்லும் அட்வைஸ் கேட்டு நடப்பது அவசியம். சத்தான உணவுகளை சாப்பிடலாம். பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்த்து விடவும் யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்க வேண்டாம். சுபகாரியங்கள் நடைபெறுவதில் அதிக தடை ஏற்படலாம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வர பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் குருவின் பார்வையில் இருக்கும் உங்களுக்கு வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பண நெருக்கடிகள் நீங்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். திருமண சுப காரிய முயற்சிகள் கை கூடி வரும். தை மாதத்தில் சுப காரியம் தொடர்பாக பேசலாம். குழந்தை பாக்கியத்திற்காக தவமிருப்பவர்களுக்கு வரம் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது. புதிய வாய்ப்புகள் கை கூடி வரும். பெண்களுக்கு நல்ல மாதம். அலுவலகத்திலும், வேலை செய்யும் இடத்திலும் குடும்பத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்களில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் வேலைப்பளுவினால் சில பாதிப்புகள் வரலாம். சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் எட்டிப்பார்க்கும். மொத்தத்தில் இந்த ஜனவரி மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மரை வழிபட வெற்றிகள் தேடி வரும்.

கன்னி
ஜனவரி மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு நற்காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கை கூடி வரும். குருவின் பயணம் ஆறாம் வீட்டில் இருந்தாலும் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. ராசி நாதன் புதன் சனியோடு இணைந்திருப்பதால் வேலையில் புதிய மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். சுக்கிரன் நான்காம் வீட்டில் செவ்வாயுடன் இணையப்போவதால் இந்த மாதம் திருமண சுப காரியங்களைப் பேசினாலும் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொத்து, வீடு, வாகனம் வாங்குவதற்கு இது ஏற்ற காலமல்ல. குழந்தை பாக்கியத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பத்தாம் வீட்டின் மீது சுக்கிரன் பார்வை விழுதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். நோய்கள் வெளிப்படும் காலமாக உள்ளது. கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைபிடிக்கவும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி தேடி வரும். ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு மாற்றங்களும் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகளும் கிடைக்கும் மாதமாக அமைந்துள்ளது. பெருமாள் கோவிலுக்கு சென்று தவறாமல் வழிபட நன்மைகள் நடைபெறும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications