ஜனவரி மாத பலன்: கும்ப ராசிக்கு பேச்சில் தான் பிரச்சனையே.. மற்றபடி அடிச்சு தூள் கிளப்ப போறீங்க
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ராசியில் அமர்வதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பூச்சிக்கடி, விஷக்கடி தொந்தரவுகள், ஏதாவதொரு நெருக்கடிகள் இருக்கும். இருப்பினும் இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ராசிக்கு அதிபதி சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குரு வீட்டில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் வேலையின் மூலம் வருமானம் கூடும்.
பேச்சில் மரியாதை
சில நேரம் கோபம் ஏற்பட்டாலும் பல நேரம் குணத்தோடு இருப்பீர்கள். 2 இல் சனி இருப்பதால் வீட்டு வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பேச்சினால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சில நேரம் நல்ல வருமானம் அதிகரிக்கும். படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். நெகட்டிவான பேச்சுகளை பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
பயணத்தில் லாபம்
எந்தவொரு விஷயத்தையும் யோசித்துப் பேசுவது நல்லது. இளைய சகோதரனால் நன்மைகள் கிடைக்கும். பழைய சொத்து ஒன்றை விற்கும் யோகம், லாபம் ஏற்படும். பயணத்தினால் லாபம் வரும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். கணவருக்கு எல்லா வகையிலும் உயர்வுகள் ஏற்படும். குரு பகவான் பார்ப்பதால் பொருளாதார உயர்வு ஏற்படும். கெளரவம் உயரும்.
செலவுகள் கூடும்
சுக்கிரன் 11 இல் இருப்பதால் வீட்டை அலங்காரப்படுத்துவீர்கள். வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவீர்கள். அதனால், செலவுகள் கூடும். வாகனத்தில் சிறிய சிறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு பெரிய வளர்ச்சிகள் ஏற்படும். பிள்ளைகளுடைய கல்வி தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணம் கூடிவரும். செய்தொழில் பெரிய விருக்தி ஏற்படும்.
பதவி கிடைக்கும்
அலுவலகத்தில் நல்ல பதவிகள் கிடைக்கும். மன மகிழ்ச்சியுடன் இருக்கும் காலகட்டமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப் பரிவர்த்தனை நன்றாக இருக்கும். சந்திர பகவான் 4 ஆம் இடத்தில் இருப்பதால் சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். பெற்ற தாய்க்கு சிறு சிறு பாதிப்புகள் இருக்கும். கணவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
வழிபாடு
கணவருக்கு சில பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விநாயகர், நரசிம்மர் வழிபாடு கணவருக்கு பாதுகாப்பைத் தரும். அரசுத் துறையில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் தலைமையை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. திடீர் வருமானங்கள் ஏற்படும். கணக்கு வழக்குகளில் மிகுந்த கவனம் தேவை. வீட்டு பத்திரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வருமானம்
2 ஆம் திருமணம் கூடி வரும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். உங்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல வருமானம் ஏற்படும். மாணவர்களுக்குப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வரதராஜப் பெருமாளை வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications