ஜூன் ராசி பலன்: கடக ராசிக்கு தடைகளை உடைக்கும் காலம்.. பண மழை கொட்டப் போகுது
ஜூன் மாத ராசி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த 3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை 29 ஆம் தேதி மேஷத்தில் உள்ள சுக்கிர பகவான் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். ஆனி 15 ஆம் தேதி சூரியன் ரிஷபத்தில் இருந்து, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே குரு மற்றும் புதன் பகவான்கள் உள்ளனர். புதன் பகவான் 22 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது பகவான் சிம்ம ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் உள்ளனர்.

ஜூன் 7 ஆம் தேதி ஏகாதசி, 8, 23 தேதிகளில் பிரதோசம் வருகிறது. 25 ஆம் தேதி அமாவசை உள்ளது. மேலும் பஞ்சாங்கப்படி இந்த மாதத்தில் ஆந்திராவிலே புயல் மழை, நம் எல்லையில் பதற்றம் நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த மாதம் கடக ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் பாசம் வைப்பதால் மோசம் போனவர்கள். பிறரை அன்பை காட்டுவதில் வல்லவர்கள். ஆனால் உங்கள் மீது யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வந்திருப்பீர்கள். எடுத்த முயற்சிகளில் எல்லாம் தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். எடுத்த காரியங்களில் எல்லாம் தடை தடை என தடைகளை மட்டுமே கடந்து வந்திருப்பீர்கள். அந்த நிலை எல்லாம் இனி மாறப்போகிறது. முதல் 15 நாட்கள் பெரிய வளர்ச்சியை நோக்கிச் செல்லும் காலகட்டமாக இருக்கும். எந்த காரியத்தை செய்தாலும் அதனை எச்சரிக்கையாகச் செல்வது நல்லது.
மாணவர்கள்
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். நல்ல கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு உண்டாகும். 4 ஆம் இடத்துக்கு அதிபதியான சுக்கிர பகவான் 10 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் நிறைய பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைக்கும். 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அபாரமான வளர்ச்சி உண்டாகும். தெய்வத்தின் அனுகூலம் அமைதியாக இருக்கும்.
பெண்கள்
கலைத் துறையைச் சேர்ந்த பெண்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களுடைய மதிப்பு, மரியாதை குடும்பத்தில் உயரும்.
அரசியல் தலைவர்கள்
சூரிய பகவான் முதல் 15 நாட்களுக்கு பாதக ஸ்தானத்தில் இருக்கிறார். பின்னர், விரைய ஸ்தானத்துக்குச் செல்கிறார். அஷ்டம சனி உங்களுக்கு விலகுவதால் அரசியல் தலைவர்களுக்கு இருந்த பெரிய தடைகள் அனைத்தும் நீங்கும். பொதுமக்களுக்கும், உங்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறைந்து, புரிதல் ஏற்படும். சூரிய பகவான் பாத ஸ்தானத்தில் இருப்பதால் எதிரிகளின் தொந்தரவு அதிகரிக்கும். விரையத்துக்கு சூரியன் செல்வதால் மனதில் சலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அந்த சலிப்புகளை கடந்து உழைத்தால் அரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும்.
வெளிநாடு யோகம்
9 ஆம் இடத்தின் அதிபதி குரு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். அடுத்த மாநிலத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். நிறைய செலவுகள் இந்த மாதத்தில் உண்டாகும் வாய்ப்புள்ளதால், சிக்கனமாக இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
தொழில்
நிறைய ஸ்டாக்குகளை வாங்கி வைப்பீர்கள். இந்த மாதத்தில் பெரிய லாபம் வரவில்லை என்றாலும், எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் இந்த மாதத்தில் அமைப்பீர்கள். பணம் விஷயத்தில், கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வரும் காலட்டமாக இருக்கும். நல்ல மாற்றம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
பரிகாரம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வருவது நற்பலன்களை அள்ளித் தரும். 11 பேருக்கு தயிர் சாதத்தை அன்னதானம் செய்வது பெரிய நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் யோகம் உண்டாகும்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications