Rasi Palan This Week: கடக ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. குட்நியூஸ் வரப் போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-cancer-signs-will-get-from-october-20-to-26

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். உங்களுடைய செல்வாக்கு, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

ஏற்றம்

பிள்ளைகள் விஷயத்திலும், குடும்பத்திலும் அதீத ஏற்றத்தைப் பெறுவீர்கள். தாய் வழி, தந்தை வழி உறவு மேம்படும். மன அழுத்தங்கள் அனைத்தும் நீங்கும். மனதில் இருந்து கொண்டிருந்த இனம் புரியாத சங்கடங்கள் நீங்கும். ரத்த பந்த உறவுகளில் பதட்டமில்லாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.

அனுகூலம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற அனைத்திலும் அனுகூலம், முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். அதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கடக ராசியினர் இருக்கும் வீட்டில் இருந்து வந்த சுப காரியத் தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

அடுத்தடுத்து குட் நியூஸ்

டிசம்பர் மாதம் வரை அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். அதற்கேற்றவாறு சூழ்நிலையை மாற்றிக் கொள்வது நல்லது. எந்தவொரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் செய்வது நல்லது. மேலதிகாரிகள், புதிய கூட்டாளிகள், புது தொழில்கள் அமையும் அற்புதமான காலகட்டம்.

யோகம்

வார்த்தைகளில் மட்டும் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கடுஞ்சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மன சோர்விற்கு ஆட்படாமல் இருப்பது நல்லது. யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் புதிய வரவுகள் குடும்பத்தில் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

வழிபாடு

பிள்ளைகளின் விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். ரத்தத்தில் பரவக்கூடிய நோய்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். உக்கிர தெய்வங்களான காளி, வாராஹி, பிரித்யுங்கரா, நரசிம்மர் வழிபாடு போன்றவற்றை செய்வது ராகுவுடைய தாக்கத்தைக் குறைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+