வார பலன்: கடக ராசிக்கு இந்த ஒரு கண்டத்தை கடந்துவிட்டால் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kadagam-vaara-palan-what-kind-of-benefits-kadagam-cancer-people-will-get-from-july-21-to-27

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி ஏற்படும். மனச்சோர்வு விலகும். உத்யோகம், தொழிலில், கல்வி, குடும்பம் ஆகியவற்றில் இழுபறியாக தடைபட்ட காரியங்கள், படிப்படியாக விலகி நன்மை வந்து சேரும். தொழிலில் இருந்த பிரச்னைகள் சற்று விலகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் உங்களுக்கு மகான்களின் ஆசி உள்ளது.

நல்ல பலன்கள்

உங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, எதிலும் நிதானத்தை கடைபிடித்தால் போதும். ஏதாவது ஒரு வகையில் நல்ல பலன்கள் உங்களை வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். தொழிலில் உங்களிடம் பணியாற்றுவோர் விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் வேண்டும்.

கவனம்

பதற்றத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்கள் அல்லது சட்ட விரோத நபர்களிடம் இருந்து முற்றிலும் விலகி இருப்பது அவசியம். தொழிலில் சின்ன சின்ன தடைகள் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை ஏற்படும். உயரதிகாரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசுத்துறை, அரசியலில் இருப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எதிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

பரிகாரம்

தொழிலில் வரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் எச்சரிக்கை அவசியம். நரம்பு, தூக்கமின்மை, தலை வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். அலட்சிய காட்டினால் ஆபத்து ஏற்படும். வியாழக்கிழமை நாளில் உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவதால் பிரச்னைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+