Rasi Palan This Week: சுக்கிரன் அருளால் கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பண மழை கொட்டப் போகுது
Kanni Rasi Palan: ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் மேஷத்திற்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை, சித்திரை 14 ஆம் தேதி முதல் சித்திரை 20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குழப்பமான மனநிலைகள் இருக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலைமைகள் இருக்கும். பொறுமையை கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். கூட்டாளிகள் சிலர் நம்மைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுடைய திறமை தான் உங்களுடைய வலிமை என்பதால் திறமையை மட்டும் நம்புவது நன்மை பயக்கும்.
தடைகள் நீங்கும்
நம்பிக்கையும், பலமும் உண்டாகும் நல்லா காலகட்டமாக இருக்கும். கூட்டுத் தொழில், தனித்தொழில் செய்பவர்களுக்கு சிறு சிறு தடைகள் வந்து சேரும். அந்த தடைகளில் இருந்து மீண்டு வருவது நன்மை பயக்கும். பெரிய வெற்றிகளைக் குவிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
கடன் நீங்கும்
கடன் அமைப்புகள் சரியாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். எல்லா விஷயத்திலும் வெற்றி அடையக்கூடிய யோகம் உண்டாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல மன நிம்மதியும். சந்தோஷமும் ஏற்படும். பண வரவுக்கான உத்தரவாதங்கள் கிடைக்கும்.
சுக்கிரன் அருள்
பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது அற்புதமான அமைப்பாகும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பண விரயங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தேவையில்லாத மறதிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வாரத்தின் இறுதியில் இழந்தவற்றை மீட்கும் யோகம் உண்டாகும். 29, 30 ஆம் தேதிகளில் அலைச்சல், டென்ஷன், குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
நினைத்த காரியங்கள் நடக்கும் நல்ல காலகட்டம். முருகனுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது மேன்மையைத் தரும்.பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். விஷ்ணு சஹஸ்ஹர நாமத்தைக் கேட்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications