Rasi Palan This Week: கன்னி ராசிக்கு அள்ள அள்ள பணம்.. இந்த வாரம் காத்திருக்கும் குட் நியூஸ்
Kanni Rasi Palan: ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சித்திரை மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்பது சூரியன் கன்னிக்கு வரக்கூடிய மாதமாகும். அந்த வகையில், ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை, சித்திரை 7 ஆம் தேதி முதல் சித்திரை 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களின் கணவன், மனைவிக்கு கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும். தலைமைச் செயலகத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தலைநகரில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இரண்டாவது பிள்ளை நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார். மருத்துவராக்கூடிய யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம், எதிர்பாராத அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டாகும். பல்வேறு பணங்கள் வந்து சேரும் காலகட்டம்.
பண வரவு
அரியர் பணம், போனஸ் பணம் போன்றவை வந்து சேரும் யோகம் உண்டு. கண்டிப்பாக வேலை மாற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டு. இடம் விற்பது, வீடு விற்பது, புரோக்கரேஜ் தொழில் செய்வது, கமிஷன் ஓரியன்டேட் தொழில், கட்டுமானத் தொழில் தொடங்குவது, புதிய நிலம் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
சளி தொந்தரவுகள், அலர்ஜி ஏற்படும். பதட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கையெழுத்து போடும் விஷயங்களில் கவனம் தேவை. அரசுத் துறை, அரசியல் துறையில் சிலர் சதி செய்யும் அமைப்பு உள்ளது. சட்ட சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. எந்த விஷயத்துக்கும் ஆவேசப்படாமல் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
லாபம் அனுகூலம்
லாபம், அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களை சந்திக்கும் பாக்கியம் ஏற்படும். கூட்டாளிகளுக்குள் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தில், வெளிவட்டாரத்தில், வியாபராத்தில், அரசியலில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
அசாத்தியமான வலிமை ஏற்படும். நிறைய விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும். திருச்செந்தூர் முருகப் பெருமான், நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications