Rasi Palan This Week: கோடீஸ்வர யோகத்தைப் பெறும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் தூள் கிளப்பும் யோகம்

Subscribe to Oneindia Tamil

Kanni Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Kanni Rasi Palan].

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-rasi-palan-what-kind-of-benefits-will-get-kanni-rasi-people-from-february-22-t0-march-1

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)

கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். கால் பாதம், மூட்டு வலி, முதுகு தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

சிக்கல் தீரும்

புதிதாக எடுத்து செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகம் ரீதியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.

தடைகள் நீங்கும்

பதவி உயர்வில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகம், பணவரவில் இருந்து வந்த தடைகள் நீங்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய நல்ல காலகட்டம். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் மாறும். கோடீஸ்வர யோகம் ஏற்படும். பொருள் சேர்க்கை ஏற்படும். பெரிய பதவிகள் தேடி வரும்.

ஆரோக்கியம்

நினைத்த காரியத்தை சாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மனதில் ஒரு காரியத்தை நினைத்தால் அதனை நடத்திக் காட்ட வேண்டும் என்கிற வைராக்கியம் ஏற்படும். அதில் வெற்றியும் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. காய்ச்சல், சளி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. 24, 25 ஆம் தேதிகளில் கவனமாக இருப்பது நல்லது.

வழிபாடு

யாரையும் நம்பி வீட்டுக்குள் விடாமல் இருப்பது நல்லது. உங்களுடைய நண்பர்களுக்கு பெரிய பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. பெரிய பணம், ஆர்டர் போன்றவை வரும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதார ரீதியாக 75 சதவீதமும் ஏற்றம் உண்டாகும். சுவாமி மலை முருகப் பெருமான் வழிபாடு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+