குரோதி தமிழ் புத்தாண்டு: ஆளும் கட்சிக்கு ராஜயோகம்.. மழையால் வெள்ளம் சூழும்.. பஞ்சாங்கம் கணிப்பு
சென்னை: குரோதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் குரோதி 60 ஆண்டுகளில் 38வது ஆண்டாக உள்ளது. குரோதி என்றால் பகைக்கேடு என்று பொருள். குரோதி ஆண்டில் நாட்டில் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடைபெறப்போகிறது. யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? மழை அளவு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ஆண்டுதோறும் நடக்கப் போகும் நிகழ்வுகளை நட்சத்திர, கிரக நிலைகளை ஆராய்ந்து, முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கம் வெளியிடப்படுகிறது. இதில் ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

சோபகிருது ஆண்டுக்கு அடுத்து வரும் குரோதி ஆண்டுக்கான பலன்களாக ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஜோதிடர் சுந்தரராஜன் ஐயர் கணித்து கூறியிருப்பதாவது:-
குரோதி தமிழ் ஆண்டில் இயற்கை நிகழ்வுகளில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கும். 16 புயல்கள் உருவாகும். அதில் 4 புயல்கள் ஆரம்ப கட்டத்திலேயே வலுவிழந்து விடும்.9 புயல்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி கடும் சூறாவளி காற்றுடன் கனமழை பொழியும். வெள்ளம் அதிக அளவில் ஏற்படும்.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை அபரிமிதமாகப் பொழிந்து எங்கும் வெள்ளக்காடாக மாறும். மும்பை, பீகார், ஒடிசா, காசி, கயா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படும். தென்மேற்கு பருவமழை அதிகளவில் கொட்டும்.
இந்த ஆண்டு ஜெக ஜாதகத்தில் அமலா யோகம் பெற்றிருப்பதால் வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ராஜயோக காலமாக இருக்கும்.
அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டமான காலமாகும். அரசியல் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கும் அபாயநிலை உருவாகும்.
இந்த ஆண்டு தன்வந்தர்கள் ஏழைகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம். நடிப்புத்துறையை சேர்ந்த ஒரு முக்கிய நடிகர் புதிய கட்சி தொடங்குவார். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். அரசியல்வாதிகள் கோர்ட் கேஸ் வழக்குகளில் சிக்க நேரிடும்.
பூண்டு, வெங்காயம், புளி, மாங்காய், கடுகு, அரிசி விலை உயரும். மின்சார உற்பத்தி பாதிப்பால் மின்வெட்டு அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும். ரியல் எஸ்டேட் நிறுவனம் வளர்ச்சி அதிகரிக்கும்.
கண் நோய், இருமல், காதுவலி, விஷ காய்ச்சல் அதிக அளவில் மக்களை பாதிக்கும். புற்றுநோய்க்கு இந்தியா மருந்து கண்டு பிடிக்கும். வவ்வால்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.
2024ஆம் ஆண்டில் ஆதாயம் 47 ஆகவும் வருவாய் 71 ஆகவும் இருக்கும். புதிய வரிகள் விதிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தனியார் நிறுவனங்கள் அதிக அளவிலான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
கையில் பணம் வைத்திருப்பது குறையும். ஆன்லைன் வியாபாரம் சூடுபிடிக்கும். மோசடிகள் அதிகரிக்கும். பாக பிரச்சனைகள் சம்பந்தமாக அதிக வழக்குகள் ஏற்படும். போலீசார் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களால் திருட்டு கைவரிசைகள் தமிழகத்தில் அதிகரிக்கலாம்.
பாரத திருநாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அண்டை நாடான பாகிஸ்தான் அல்லது தெற்கு பகுதியில் உள்ள இலங்கை நமது நாட்டுடன் இணையும் சூழ்நிலை உருவாகலாம். சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் எல்லை பிரச்சனைகள் உருவாகி போர் மூளும் சூழல் உருவாகலாம்.
இந்தியாவில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கும். மின்சாரக்கட்டணம் கடுமையாக உயரும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications