Kumbam: கும்ப ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் 4 கிரகங்கள்.. நினைத்தது நடக்கும் யோகம்
March month rasi palan: மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கும்ப ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் ராகு, செவ்வாய், புதன் ஆகிய கிரகஹ்கள் மாதம் முழுவதும் அங்கேயே இருக்கின்றன. குரு பார்வையில் இருப்பதால் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தரும். மாதத்தின் பிற்பகலில் சுக்கிரன் உச்சத்தை அடைகிறார். குருவுக்கு நிகரான மிகப்பெரிய சுபரான சுக்கிரன் உச்சத்தை அடைவதால் பெண்கள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். பெண்கள் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டக் கூடிய தன்மை ஏற்படும். [Kumbam]

ஆண்களால் ஏற்படும் பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். சனி பகவான் உச்ச சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவத்தை அடைவதால் தொழிலாளர் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு நன்றாக இருக்கும் காலகட்டம். சிலருக்கு காதல் மலரும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்துப் பார்க்கலாம்.
கும்பம் மார்ச் மாத பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே 4 கிரகங்கள் கூடியிருக்கின்றன. பஞ்சமாதிபதியான புதன் ராசியில் மாதம் முழுவதும் குருவின் பார்வையில் இருக்கிறார். 5, 10க்கும் உடைய புதனும், செவ்வாயும் மாதம் முழுவதும் ராசியிலேயே குருவின் பார்வையில் இருக்கின்றனர். கடந்த காலத்தில் தொழில் துறையில் சாதிக்க முடியாமல் இருந்த கும்ப ராசியினருக்கு வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அமைப்புகளில் நீங்கள் நினைத்தது போன்றே நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய சிறப்பான மாதமாக இருக்கும்.
இடமாற்றம்
பொதுவாக கும்ப ராசியினர் எதையும் யோசித்து நிதானமாக செயல்படக் கூடியவர்கள். இப்போது உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். உங்களுடைய வேகத்துக்கு மற்றவர்கள் செயல்படவில்லை என்பதற்காக கோபப்படும் சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவிக்கு இடமாற்றம், கணவருக்கு இடமாற்றம் என சில மாற்றங்கள் உண்டாகும்.
சாதுரியம்
வேலைக்காக வெளிநாடு செல்வது, ஒரு மாதத்திற்கு வெளியில் செல்வது போன்ற நிலை ஏற்படும். மார்ச் மாதத்தில் குடும்பத்தில் சிறிய சிறிய சங்கடங்கள் இருந்தாலும் அதனை சாதுரியமாக சமாளிக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். 20 ஆம் தேதிக்குப் பிறகு சுக்கிரன் உச்சத்தில் அமர்ந்து 2 ஆம் இடத்தில் சனியுடன் சேருவதால் பண வரவுகள் அற்புதமாக இருக்கும். இதுவரைக்கும் சம்பாதிப்பதில் இருந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
பணவரவு
கடன் கட்ட முடியவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், நண்பருக்கு கிரெடிட் கார்டு கொடுத்து ஏமாந்தவர்கள், செய்யாத தவறுக்கு, வாங்காத பணத்திற்கு வட்டிக் கொண்டிருப்பவர்கள் என எல்லா நிலையிலும் பண விஷயத்தில் பாதிக்கப்பட்டிருந்த கும்ப ராசியினருக்கு அந்த பாதிப்புகளில் இருந்து வெளியில் வருவதற்கான அமைப்புகள் உருவாகும் நல்ல மாதமாக இருக்கும்.
முடிவுகளில் தெளிவு
காதல் தோல்வி ஏற்பட்டிருந்த இளைய பருவத்தினருக்கு புதிய காதல் உண்டாகும். அத்தை மகள், மகன், மாமன் மகள், மகனை திருமணம் செய்ய முடியவில்லை, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என திருமணம் சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் இருந்தவர்களுக்கு தெளிவான முடிவை எடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
செட்டிலாகும் யோகம்
கும்ப ராசியினர் செட்டிலாகக்கூடிய யோகம் உண்டாகும். இளைஞர்கள் கூடுதல் நன்மை பெறக்கூடிய காலகட்டம். ஜென்ம சனி உங்களை படாதபாடு படுத்தியிருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சோம்பல் விலகும். எதைச் செய்யலாம், செய்யக் கூடாது என்கிற தெளிவு ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்!












Click it and Unblock the Notifications