Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயில் கோபுரம் சிதையும்.. அரசர்களுக்கு ஆபத்து.. குரு ராகு கேது பெயர்ச்சியால் நடக்க போகும் மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் யோகம், எந்த துறை வளர்ச்சி பெறும், உலகில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

lets-find-out-what-changes-are-going-to-happen-in-the-world-due-to-the-transit-of-saturn-jupiter

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் உலகத்தில் வரும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

அரசர்களுக்கு ஆபத்து

ராகு கும்பத்தில் வருவதால் கோயில் கோபுரங்கள் சிதைவடைவதற்கான வாய்ப்பு உண்டு. மலைக் கோயில்களில் சிறு சிறு விபத்துகள் ஏற்படும். கூட்டமாக மக்கள் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் உள்ளவர்களுக்கு சிறு சிறு தடைகள் வரும். தீ விபத்து, அரசர்களுக்கு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் சூழல் உள்ளது.

ஐடி துறைக்கு ஜாக்பாட்

குரு பகவான் மிதுனத்துக்குப் போகிறார். யூடியூபர், இன்ப்ளூயன்சர், ஐடி துறையில் இருப்பவர்கள், ஆர்டிஃபீசியல் இன்டெலிஜன்ஸ் துறையில் இருப்பவர்கள், பேராசிரியர்கள், அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். இந்த துறையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

சம்பள உயர்வு

பள்ளிகளில் வேலை செய்வோருக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கும். டியூசன் எடுப்பவர்களுக்கு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிகள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஓடாமல் இருந்த பள்ளிகள் நன்றாக இயங்கத் தொடங்கும். ஆன்லைன் பயிற்சிகள் அதிகரிக்கும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

பாதிப்பு என்ன?

நரம்பு, கண், உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். யோகா, ஜிம் சென்டர்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். கழுத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அம்மை, நீர்க்கட்டிகள் போன்றவை ஏற்படுவதற்கான பாதிப்புள்ளது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

சனி, குரு, ராகு கேது பெயர்ச்சிகள் காரணமாக யோக பலன்களை அதிக அளவில் பெரும் முதல் ராசி மிதுனம். அடுத்ததாக துலாம் ராசி, தனுசு ராசிக்காரர்களுக்கு பாசிட்டிவான காலகட்டமாக இருக்கும். அதேபோல, சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. ராசியிலேயே கேது வருவதால் கவனமாக இருக்க வேண்டும். தனுசு ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி இருப்பதால் சிறிது கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும், குரு பார்வை இருப்பதால் நன்மையைப் பெறுவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

குரு 8 ல் மறைவதால் விருச்சிக ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முடிவை எடுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஏழரை சனியால் மீனம், மேஷம் ராசியினருக்கு பாதிப்பு இருந்தாலும் குரு பார்வை இருப்பதால் நன்மை உண்டாகும். சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது நல்லது.

தெய்வ வழிபாடு

துர்கையை வழிபடுவது மிகுந்த நன்மையைத் தரும். மலையில் இருக்கக்கூடிய வைஷ்ணவி தேவி, துர்காம்பாள், மூகாம்பிகை, அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது அமோக நற்பலன்களைத் தரும். குருப்பெயர்ச்சி நடைபெறுவதால் மகாவிஷ்ணு, மீனாட்சியம்மாளை வழிபடுவது அனைத்துவிதமான நன்மைகளையும் அள்ளித் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+