Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு ராகு கேது பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு.. சோம்பேறித்தனம் மட்டும் வேண்டாமே

Subscribe to Oneindia Tamil

Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

lets-take-a-look-at-the-benefits-of-guru-rahu-ketu-peyarchi-for-rishabam-taurus-rasi-people

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்து ஆண்டுகளாக படாத பாடு பட்டிருப்பீர்கள். நிறைய பாதிப்புகளையும், சவால்களையும் சந்தித்து வந்த உங்களுக்கு இனி ஏற்றமான காலகட்டமாக இருக்கும். எதற்கெடுத்தாலும் விரக்தி, தோல்வியை பார்த்திருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு தொழிலில் அமோகமான வளர்ச்சியைக் கொடுக்கும்.

லாபம்

சனி 3 ஆம் பார்வை இருப்பதால் சோம்பேறித்தனம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் அதனைத் தவிர்த்து வேக வேகமாக செயல்பட்டால் தொழிலில் அற்புதமான லாபம் கிடைக்கும். பல வகை தொழிலைச் செய்வது நல்லது. கேது 4 ஆம் இடத்தில் இருப்பதால் முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதனால் சமநிலையோடு உங்கள் திறமையைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான காலகட்டமாக இருக்கும்.

வேகம் முக்கியம்

குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். ஜென்மகுருவில் இருந்து 2 ஆம் இடத்துக்கு குரு போவதால் மாற்றங்கள் அனைத்தும் உண்டாகும். தாயாருடைய ஆரோக்கியம், தந்தையின் ஆரோக்கியம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழிலில் வேகத்தோடு இருப்பது நல்லது. ஆனால், முன்பின் தெரியாதவர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

செல்வம் சேரும்

வீடு, இடம் வாங்கும்போது லீகல் செக் செய்து வாங்கிக் கொள்வது நல்லது. பூர்வீக இடங்களை வாங்குவது நல்லது. சேமிப்புகளை மனைவிகள் பெயரில், குழந்தைகள் பெயரில் வைப்பது நல்லது. குரு 2 ஆம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

முன்னேற்றம்

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். ஒரு காரியங்களை எளிதில் செய்து முடிக்க முடியாது. சில தடங்கல்கள் வந்துதான் காரியம் நடக்கும். உங்களுடைய தவறுகளை சரிசெய்து கொண்டால் அருமையான நன்மைகள் நடக்கும். பிரச்சனைகளில் நல்லதும், நல்லதுகளில் பிரச்சனைகளும் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். உடல் பருமன் பிரச்சனைகளை கவனமாக கையாளுவது நல்லது.

கவனமாக இருக்க வேண்டியவை

உத்தியோகத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பது நல்லது. சோம்பேறித் தனத்தை தவிர்த்து வேகமாகச் செயல்படுவது அற்புதத்தை உண்டாக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக செயல்படுவது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம்

இந்த காலகட்டத்தில் பிள்ளையார் வழிபாடு அற்புதமான பலன்களைத் தரும். வீட்டின் அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்குச் சென்று வலம் வந்து வழிபட்டு வருவது நற்பலன்களை அள்ளித் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+