Chandra Grahan 2025: சிம்ம ராசிக்கு வார்னிங்.. பணத்தை பதம் பார்க்கும் கிரகணம்.. ரொம்ப கவனம்
Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திரகிரகணத்தால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இரவு 9.57 முதல் நள்ளிரவு 1.56 வரையிலான காலகட்டத்தில் இந்த சந்திரகிரகணம் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அதற்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. அடுத்த நாளை குளித்துக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு சமைத்து சாப்பிடுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் வீட்டில் ஓய்வெடுப்பது நல்லது. ஜெபதப அனுஷ்டானங்கள் செய்யக்கூடியவர்கள் 9.56 மணிக்கும், 1.58 மணிக்கும் குளித்துவிட்டு ஜெபம் செய்வது நல்லது. இந்த கிரகண காலத்தில் ஒருமுறை மந்திரத்தை ஜபித்தாலும் அது 10 முறைக்கு சொன்னதற்கு சமமாகும். அந்த அளவு புண்ணியம் கிடைக்கும்.
5 ராசியினர் கவனம்
முருகன், சிவனை வழிபாடு செய்வது, காயத்திரி மந்திரம் ஜெபிப்பது நன்மையைத் தரும். சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் சந்திர மெளலீஸ்வரரை மனதார வழிபடுவது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். இந்த சந்திரகிரகண காலத்தில் 5 ராசியினருக்கு அதாவது கும்பம், துலாம், மிதுனம், மகரம், மீனம் பிரச்சனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இதனால், மன சஞ்சலம் ஏற்படும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அழுத்துவது போன்று இருக்கும். 40 நாட்களுக்கு இதுபோன்ற நிலைமையே தொடரும்.
யோகமான ராசி
இந்த சந்திரகிரகண காலகட்டத்தில் தனுசு, ரிஷபம், கன்னி ஆகிய மூன்று ராசியினருக்கு அற்புதமான நேரமாக இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்துமே நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கடன் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாத விஷயங்களை எல்லாம் நடத்தி முடிப்பீர்கள். வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டாகும்.
இந்த சந்திரகிரகணத்தால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்மம் ராசி, லக்னத்தினர் இந்த சந்திர கிரகணம் காரணமாக அடுத்த 40 நாட்கள் கவனமாக தான் இருக்க வேண்டும். ஏழாம் இடமான சம சப்தமம் பாதிக்கப்படுகிறது. இந்த ஏழாம் இடம் தான் மனைவி, கணவர், தொழில் கூட்டாளி, வாடிக்கையாளர் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களுக்கான அதிபதி. அது பாதிக்கப்படுவதால் பல்வேறு வகையில் உங்களுக்கு பிரச்சனை ஏற்படும்.
வாழ்க்கை துணை
வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படும். வயிறு, கால், கர்பப்பை போன்ற பிரச்சனைகளில் அதிக கவனம் வேண்டும். திடீரென ஒரு பிரச்சனை வெடித்து அவசர அவசரமாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய காலகட்டம். சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மோசடிகள்
நன்றாக சென்று கொண்டிருக்கும் தொழிலில் கூட்டாளிகளால் திடீர் சிக்கல்கள் ஏற்படும். முக்கியமாக மூன்றாவது இடத்தில் உள்ள கூட்டாளியின் சதி, வன்மம் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படும். தொழிலில் உங்களுக்கு தெரியாமல் நடைபெற்ற மோசடிகள் இந்த காலத்தில் தெரியவரும். வரி, சட்ட சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் எழுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம்
உங்களின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அடிவயிறு, குடல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். மருந்துகளை தவறாமல் எடுத்தல், மருத்துவ பரிசோதனைகளை சரிவர செய்தல் ஆகியவை பெரிய பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.
பரிகாரம்
உத்யோகத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். எதிலும் வார்த்தைகளை விடாமல் நிதானத்தை கடைபிடித்தல் முக்கியம். உத்யோகம், தொழில், குடும்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்குவாதம், மோதல் ஆகியவற்றை தவிர்த்து விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பிரச்சனைகள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்க, ஒரு கலசத்தில் 250 கிராம் அரிசி, தர்ப்பை, தட்சணை ஆகியவற்றுடன் வயதானவருக்கு தானம் செய்ய வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications