Rasi Palan This Week: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அடுத்தடுத்து எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இதுவரை இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நரம்பு கோளாறுகள், முதுகுத் தண்டுவட கோளாறுகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
பணவரவு
வண்டி, வாகனத்தில் வித்தைகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விநாயகர் வழிபாடு உங்களுக்கு எல்லா விதத்திலும் ஏற்றத்தைக் கொடுக்கும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. பண வரவுக்கு உத்தரவாதம் ஏற்படும். இது முக்கியமான வாரமாக உங்களுக்கு இருக்கும். குரு வக்கிரமாக உச்ச ஸ்தானத்துக்கு வந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
தொழில்
புதிய தொழில் தொடங்குவது, புதிய வியாபாரம் தொடங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். ஒருசிலருக்கு மார்பகம் சார்ந்த பிரச்சனை, ஹார்மோன் குறைபாடுகள் போன்றவை ஏற்படும். சனி வக்கிரத்தில் அமர்ந்திருப்பதால் நவம்பர் மாதத்துக்குப் பிறகு தான் தெளிவு பெறுவீர்கள். அதுவரை எல்லா விஷயங்களிலும் சந்தேகம் ஏற்படும்.
யோகம்
மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். டென்ஷன் குறையும். குரு உங்கள் ராசி, லக்கினத்தைப் பார்ப்பதால் மகரத்துக்கு யோகமான காலம் ஆரம்பமாகிவிட்டது. செவ்வாய் உச்சமடைவதால் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, நண்பர்கள், சகோதரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பஞ்சாயத்துகளில் ஜெயிப்பீர்கள்.
டாப் கிளாஸ் யோகம்
10 ஆம் இடத்தில் சுக்கிரன் தன் வீட்டில் உட்கார்ந்திருப்பது பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். வேலையில் பெரிய இடத்தில் இருப்பீர்கள். எடுத்த காரியங்களில் மிகப்பெரிய யோகங்கள் உண்டாகும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேர்வீர்கள். அஷ்டமத்தில் கேது அமர்ந்திருப்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளில் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி மகரத்துக்கு டாப் கிளாஸ் யோகமாக இருக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications