மகாசிவராத்திரி: சிம்மம் முதல் விருச்சிகம் வரை.. வழிபாடு, தானமாக வழங்க வேண்டிய பொருட்கள்?.. யோகம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

மஹா சிவராத்திரி: மஹா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படவுள்ளது. மாலை முதல் காலை வரை நான்கு கால பூஜைகளுடன் ஒவ்வொரு சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த நன்னாளில் மேஷம் முதல் கடகம் வரை ஒவ்வொரு ராசியினரும் சிவபெருமானை வழிபடும் முறை குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மாதம்தோறும் சிவராத்திரி வருகின்றது. ஆனாலும், மாசி மாதம் வரும் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சிவனடியார்கள் எல்லோரும் சதுர்தசியிலும் விரதம் இருந்து சிவனை வழிபாடுவார்கள். ஆண்டு முழுவதும் வரும் சதுர்தசியில் வழிபடவில்லை என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி அன்று வழிபடுவதால் அனைத்து விதமான பலன்களையும் பெற்று விடலாம் என்பது நம்பிக்கை.

2025 Maha sivarathri Astrology Rasi palan

144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பத்தில் சூரியனும், ரிஷபத்தில் குருவும் இருக்கக்கூடிய காலகட்டத்தில்தான் கும்பமேளாக்கள் நடத்தப்படும். பெரும்பாலும், அனைத்து கிரகங்களும் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். இதேபோன்ற அமைப்பு 144 ஆண்டுகளுக்கு முன்பாகததான் அமைந்தது. அதனால்தான் இது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

மகா கும்பமேளாவையொட்டி, மகா சிவராத்திரி நாளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த நாளில் அனைவரும் கண் விழித்திருந்து சிவபூஜை செய்வது நல்லது. நான்கு கால பூஜைகள் நடைபெறும். அதில் அனைவருமே கலந்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு பரிகார வழிபாடுகள், வழிபாட்டு முறைகள், சமர்ப்பணங்கள் உள்ளன. இந்த முறைகளை கடைப்பிடிப்பதால் மக்களுக்கு சிறப்பான பலன்களும் கிடைக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களைப் பொருத்தவரை 7 ஆம் இடத்தில் சனி பகவான் அதாவது கண்டகச் சனி. அதற்கு அடுத்ததாக 8 ஆம் இடத்துக்குப் போகிறார் அஷ்டம சனி. சிவனை வழிபட வேண்டிய ராசிக்காரர்களில் முதன்மையான ராசியினர் சிம்ம ராசிக்காரர்கள். அனைத்து சனிக்கிழமைகளிலும் கட்டாயம் வழிபட வேண்டும். வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுவது நல்லது. சனி பகவானால் உண்டாகும் கெடுபலன்கள் அகலும்.

விபூதி அபிஷேகம் காண கண்கோடி வேண்டும். சிம்ம ராசியினர் விபூதியை சமர்ப்பணம் செய்யலாம். வஸ்திரங்களை தானமாக அளிக்கலாம். வில்வ லிங்கம், நாகலிங்கப் பூ, செண்பக பூக்களை சிவாலயங்களில் கொடுத்து அர்ச்சனை செய்வது அற்புதமான பலன்களைத் தரும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கேது ராசியில் இருக்கிறார். ஓரிரு மாதங்கள் கழித்து 12 ஆம் இடத்துக்குப் போய்விடுவார். ராகு பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்கு வந்துவிடுவார். ஓரளவுக்கு சாதகமான அம்சமாக இருந்தாலும் 7 ஆம் இடத்துக்கு சனி வருவது அவ்வளவு நல்லதல்ல. அன்னதானம் செய்வதுதான் இருப்பதிலேயே உயர்ந்த தானம்.

கன்னி ராசிக்காரர்கள் இந்த உயர்ந்த பரிகாரத்தை சிவாராத்திரி தினத்தன்று செய்வது நல்ல பலன்களைத் தரும். தயிர் சாதம் நிவேதனம் செய்து, அதை அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கொடுக்கலாம். குறைந்தபட்சமாக 13 பேருக்காவது கொடுப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

துலாம்: சுக்கிரனின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடியவர்கள் துலாம் ராசியினர். சுக்கிரன் என்றாலே வெண்மை நிறம். உங்களுக்கு பால் என்பது சிறந்த பரிகாரப் பொருளாக இருக்கும். இப்போது சிரமமான காலகட்டமாக இருந்தாலும் மே மாதத்திற்குப் பிறகு அமோகமான காலகட்டமாக இருக்கும். நம்மோடு இறைவன் இருக்கிறார் என்றால் நமக்கு அந்த காலகட்டத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறலாம். அப்படிப்பட்ட காலகட்டம் துலாமிற்கு வருகிறது.

சிவாலயங்களில் பால் அபிஷேகம் செய்வது, சிவனடியார்களுக்கு ருத்திராட்சம் வாங்கிக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். சுப காரியங்கள் தள்ளிப் போகின்ற வீடுகளில் ருத்ராட்சம் வாங்கிக் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். தடைகள் அனைத்தும் நீங்கும்

விருச்சிகம்: விருச்சிக ராசி செவ்வாய்க்குரிய ராசி. சந்திரன் நீசமாவதால் விருச்சிக ராசிக்காரர்கள் உடனடியாக ஒரு முடிவை எடுப்பார்கள். இதை செய்யாலமா அதை செய்யலாமா என்று ஆலோசனை கேட்டு கேட்டு முடிவுகளை மாற்றி மாற்றி சரியான ஒரு முடிவை எடுக்க ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய ராசிக்காரர்கள் நீங்கள்

உங்களுக்கு ஒரு நல்ல காலகட்டம் தொடங்கப் போகிறது. இதனை நிச்சயமாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்படிகத்தில் லிங்கம் இருக்கும். சிறிய அளவு முதல் 6 அங்குலம் வரையுள்ள லிங்கத்தை வீட்டில் வைத்து அபிஷேகம் செய்யும் வகையில் அடியார்களுக்கு தானமாக கொடுப்பது யோக பலன்களைத் தரும். தேவையற்ற தடுமாற்றங்கள் இருக்காது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+