Kadagam Rasi Palan: கடக ராசிக்கு குரு உச்சம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் சூப்பர் நேரம்
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கடகம் ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் கடகம் ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
கடகம்
கடக ராசி மற்றும் லக்னத்தினருக்கு இந்த மார்கழி மாதத்தில் நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும், தகுதிகள் பேசப்படக் கூடிய மாதமாக இருக்கும். உங்கள் ராசியிலேயே பாக்கிய ஸ்தானதிபதியான குரு உச்சமாக இருப்பதால் மிகவும் நன்மைகள் கிடைக்கும். குரு ஜென்ம ராசியில் இருக்கும்போது நல்லது செய்ய மாட்டார். ஆனால், குரு பகவான் கடக ராசியில் குரு ஜென்ம ராசியில் இருந்தாலும் உச்சமாக இருப்பதால் அற்புதமான யோகம் கிடைக்கும்.
முன்னேற்றம்
மிகப்பெரிய ஏற்றங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில நன்மைகள் கிடைக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். உங்களுடைய ஜென்ம ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரனும், புதனும் சேர்ந்திருப்பதால் உங்களுடைய லட்சியங்கள் பிள்ளைகள் மூலமாக நிறைவேறும். பிள்ளைகள் மூலமாக நன்மைகள் உண்டாகும்.
பயணங்களால் அனுகூலம்
கடல் கடந்து செல்லக்கூடிய பயணங்களில் இருந்து வந்த தடைகள், தாமதங்கள் விலகும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து விடுதலை பெறும் யோகம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வருமானம் உண்டாகும். கடன் என்றே சொல்ல இயலாத நிலை ஏற்படும். கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு பொதுவாக உதவி செய்யும் மனப்பான்மை அதிகளவில் இருக்கும்.
சந்திரன் அருள்
மனோகாரகன் சந்திர பகவானின் ஆதிக்கம், அருள் உங்களுக்கு இருப்பதால் ஒரு சிக்கல் வரும்போது தீர்வு காணக்கூடிய யோகம் ஏற்படும். அடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு அறிவுரை சொல்வதால் தேவையில்லாத சங்கடம் ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும். இருப்பினும், எந்தவொரு சிக்கல் இருந்தாலும் தெளிவான முடிவெடுப்பீர்கள். பாதகமான சந்தர்ப்பங்களையும் சாதமான சந்தர்ப்பங்களாக மாற்றி அமைப்பீர்கள்.
வழிபாடு
நாம் நல்லது சொன்னாலும் தேவையில்லாத பொல்லாப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மார்கழி மாதத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் 6 ஆம் இடத்தில் செவ்வாயும், சூரியனும் சேர்ந்திருப்பதால் தேவையில்லாத மனதிற்கு ஒவ்வாத சூழல் ஏற்படும். எந்தவொரு பிரச்சனையும் பாதிக்காத வகையில் இருக்க திங்கள்கிழமை தோறும் சுவாமி வழிபாடு செய்வது நல்லது. பெண் தெய்வ வழிபாடு செய்வது, குலதெய்வ வழிபாடு செய்வது உங்களையும், உங்கள் குடும்பத்துக்கும் ஏற்றத்தை தரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications