Meenam Rasi Palan: மீன ராசியின் வாழ்வில் கூடி கும்மியடிக்கப் போகும் கிரகங்கள்.. பொறுமை ரொம்ப அவசியம்

Subscribe to Oneindia Tamil

சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

meenam-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-surya-grahan-period

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு மீனம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனும் 7 ஆம் இடத்தில் சூரிய கிரகணம் நடைபெற்றுள்ளது. லக்கினம், ராசியிலேயே சனி வக்கிரமாக உள்ளது. இரண்டுமே எதிர்தரப்பினர். சண்டை, சச்சரவு, தேவையில்லாத வாக்குவாதம், பிரச்சனை, குழப்பம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கண்டம் வருவதற்கான வாய்ப்புள்ளது. திடீரென வழுக்கி விழுந்து அடிபடுவதற்கான சூழல் ஏற்படும்.

கவனம்

கணவனாக இருந்தால் மனைவியைப் பிரியக்கூடிய நிலைமையும், மனைவியாக இருந்தால் கணவனைப் பிரியக்கூடிய நிலைமை ஏற்படும். வேலை, சண்டை, வன்மன் காரணமாகவும் பிரிய நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மாமனார் உடல்நிலை, மாமியார் உடல்நிலை, இரண்டாம் குழந்தையின் உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

மூன்றாம் நபர் தலையீடு

ஒரு சில பேருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உஷ்ணம், அல்சர் போன்றவை ஏற்படும். முடிந்த அளவுக்கு சரியான சாப்பாடு சாப்பிடுவது நல்லது. கணவன், மனைவிக்குள் மூன்றாம் நபரை விடாமல் இருப்பது நல்லது. சனி வக்கிரமாக இருக்கும்போது நேரடியாக ஸ்தான பலம், பார்வை பலம் இருக்கும்போது நேரடியாக பாதிப்புகள் ஏற்படும். இரண்டும் நேரெதிரானது என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

புறம்பேசக் கூடாது

மற்றவர்களைப் பற்றி தேவையில்லாமல் புறம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. பொறுமையுடன், திட்டமிட்டு செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். அவசரப்படாமல் இருப்பது நல்லது. சனி ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் நல்லது நடக்கும். இந்த சூரியகிரகண காலகட்டத்தில் வாழ்க்கைத் துணைக்கு பாதிப்புகளைக் கொடுக்கும்.

வழிபாடு பரிகாரம்

பார்ட்னர்ஷிப்பில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதில் ஒரு கோளாறு, பிரிவு, சர்ச்சை, வழக்குகள் போன்றவை ஏற்படும். ரகசியங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. மீன ராசியினர் இந்த சூரிய கிரகணத்தில் மிகுந்த பொறுமையாக கையாளுவது நல்லது. பெருமாள், ரங்கநாதன், பார்த்தசாரதியை வழிபாடு செய்வது உங்களுக்கு அற்புதத்தை ஏற்படுத்தும். செம்பு பாத்திரத்தில் எள், கோதுமை, நெல் தானம் வைத்து பிராமணர்களுக்கு தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+