Rasi Palan This Week: மீன ராசிக்கு குருவின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்.. ஆண், பெண்ணிடம் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-weekly-rasi-palan-what-kind-of-benefits-meenam-pisces-people-will-get-from-september-15-to

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும், உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 4 ஆம் இடமான மிதுனத்தில் குரு இருக்கும் வரையில் தொழில், உத்தியோகம், வேலை, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பாதிப்புகள் ஏற்பட்டால் நீங்கள் தான் காரணமாக இருப்பீர்களே தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது.

பாதிப்புகள் நீங்கும்

கிரக நிலைகள் அற்புதமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பாதிப்பு என்றால் நீங்கள் தான் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். மன அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். நாள்தோறும் ஆயில் புல்லிங்க செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.

வழிபாடு

அனுமன் வழிபாடு, அனுமன் சாலிஷா கேட்பது நன்மை பயக்கும். நரசிம்மர் கவசம், கணபதி காயத்ரி கேட்பது மேன்மையை ஏற்படுத்தும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றங்கள் உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ரத்தத்தில் பரவும் நோய் பிரச்சனைகளில் மிகுந்த கவனம் தேவை. லாபம் ஏற்படும்.

மகிழ்ச்சி பெருகும்

குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். பெரிய அளவில் முதலீடுகள் கிடைக்கும். வங்கிகள் மூலமாக ஆதாயங்கள் உண்டாகும். யோக பலன்கள் அதிக அளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வரும் நல்ல செய்திகள் உங்களுக்கு முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்.

கவனம்

பயணங்கள் விஷயத்தில் ஆண்கள், பெண்கள் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் எல்லாமே உங்களுக்கு சாதகமாகவும், சந்தோஷமாகவும் காணப்படும். வேற்று மொழி மனிதர்களுடன் தொடர்புகள் ஏற்படும். கடல் கடந்து செல்லும் யோகம் உண்டாகும். மற்ற மொழிகள் பேசுபவர்கள் மூலமாக பெரிய லாபமும், அனுகூலங்களும் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+