ஆடி மாத பலன் 2025: மிதுன ராசிக்கு சூப்பரான இடத்தில் சூரியன்.. மொத்தமாக மாறும் வாழ்க்கை
ஆடி மாத பலன் : ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் பிறக்கப் போகிறது. ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான இந்த ஆடி மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிகழப்போகும் மாற்றங்கள், கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் சனி வக்கிர கதியில் இயங்குகிறார். ஜூலை 12 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை சனி வக்ர கதியில் இயங்கப் போகிறார். கும்பம் வீட்டில் ராகு குருவின் பார்வையில் இருக்கிறார். சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். 24 ஆம் தேதிக்குப் பிறகு குருவோடு இணைந்த சுக்கிரனாக மிதுனத்தை நோக்கி பரிவர்த்தணை செய்கிறார்.

சூரிய பகவான் ஆடி மாதம் 1 ஆம் தேதி கடகத்துக்கு பிரவேசிக்கிறார். அந்த இடத்தில் புதனும் இருக்கிறது. ஜூலை 28 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் பகவான் கேதுவிடம் இருந்து தப்பித்து கன்னி வீடான புதன் வீட்டுக்கு சஞ்சாரம் செய்யப் போகிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும், என்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம் ஆடி மாத பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான பலன்களை தரப்போகிறது. எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இழந்தவை அனைத்தையும் மீட்டுக் கொடுக்க கூடிய காலம் இது. கடந்த காலங்களில் உத்யோகம், தொழிலில், குடும்பம் என எல்லாவற்றிலும் இருந்த பிரச்னைகள் விலகும். தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகும்.
பண வரவு.. மகிழ்ச்சி
மனதில் நினைத்த மற்றும் இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சூரியன் இரண்டாம் வீட்டில் அமரப்போகிறார். இது அருமையான அமைப்பு. பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் ஏற்றமடையும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி உருவாகும். குழப்பங்களில் இருந்து விடுபட்டு மனம் தெளிவடையும்.
பேச்சு..தொழிலில்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வாக்குஸ்தானம் பலமடையும். உங்கள் பேச்சுக்கு செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும். உத்யோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உத்யோகத்தில் மாற்றம் எதிர்பார்ப்பவர்கள், புதிய வேலைக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல தகவல் கிடைக்கும். வருமானம் உயரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
திருப்புமுனை
காதல் உறவில் இனிமைக் கூடும். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். சுப செலவுகள் இருக்கும். முதலீட்டில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்யோகம், தொழிலில், வீடு, கல்வி எல்லாவற்றிலும் மாற்றம் இருக்கும். இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் உயர்வுக்கான திருப்புமுனையாக இருக்கும்.
ராஜயோகம்
ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். நீண்ட காலமாக போக நினைத்த புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுக்கிர பகவான் எழுச்சியால் ராஜ யோகம் கிடைக்கும். கடவுளின் ஆசி பரிபூரணமாக உள்ளது. சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் மீதான அக்கறை அதிகரிக்கும். கல்வி சிறப்பாக இருக்கும்.
கவனம்.. பரிகாரம்
ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். காது, மூக்கு, தொண்டை, சுவாசம், சளி, முதுகு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள். சேமிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான சூழல் ஏற்படும். மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வதால் சோதனைகளை சாதனைகளை மாற்றி நல்ல பலன்களை பெற முடியும்.
-
ஜூன் மாத ராசிபலன் 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தரும் மாதமா? -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications