வார பலன்: மிதுன ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. வாயில தான் கண்டம்.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இதய பாதிப்பு, முதுகுத் தண்டுவடப் பிரச்சனை உள்ளவர்கள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கழுத்து, முதுகு, கால், கை தொடர்பான விஷயங்களில் பாதிப்பு ஏற்படும். செவ்வாய்க்கிழமை தோறும் சுவாமி வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள்.
முன்னேற்றம்
எதிரிகளில் தொல்லைகள் பரிபூரணமாக நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். துணை விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தாய் வழி, தந்தை வழி உறவில் அனுகூலம் காணப்படும்.
கவனம்
குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுப்பதன் மூலம் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இதுவரை இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் வேகமெடுக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
அனுகூலம்
தெய்வ வழிபாடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படும். மலைக் கோயில்களுக்குச் செல்வது, சபரிமலைக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தனிப்பட்ட முறையில் அனைத்து விஷயங்களிலும் அனுகூலங்கள் காணப்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
சிக்கல்கள் தீரும்
உத்தியோகத்தில் அதிக அளவிலான ஏற்றம், நம்பிக்கை ஏற்படும். துணை விஷயத்தில் இருந்து வந்த நீண்ட நாள் சங்கடங்கள் தீரும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மாற்றங்கள், வாய்ப்புகள் வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்வது வாழ்வில் ஏற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.
-
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications