Puthandu Palan 2026: தனுசு ராசிக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்.. காசு, பணம், துட்டு, மணி, மணி.. என்ஜாய்
புத்தாண்டு ராசி பலன் 2026: வலிகளைப் போக்கு புதுமைகளைத் தரப்போகும் 2026 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. அந்த வகையில், இந்தப் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. 2026 புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்த ஆண்டிலாவாது நல்லவை நடக்குமா, பிரச்சனை தீரூமான, கனவுகள் நிறைவேறுமா என்று காத்துக் கொண்டிருப்பீர்கள். நிச்சயமாக எல்லோருக்கும் இந்த ஆண்டு புதுமை செய்யும் ஆண்டாக இருக்கும். சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது.

சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.
2026 புத்தாண்டில் நிலம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும். திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார்.
அந்த வகையில், இந்தப் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், என்னென்ன ஆசை, கனவுகள் நிறைவேறும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
தனுசு (Dhanusu new year rasi palan):
தனுசு ராசிக்கு உங்கள் ராசிக்கு 6 ஆம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லா விதத்திலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 8 ஆவது வீட்டுக்கு உரிய கிரகம் 6 ஆவது வீட்டில் மறைந்திருப்பதால் திடீர் யோகங்கள் உண்டாகும். குடும்பத்தில் எப்போதும் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். பிள்ளைகளுக்கு நல்ல வேலைகள் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
ஏற்றம்
பிள்ளைகளுக்குத் திருமண யோகம் ஏற்படும். பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் நல்ல ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் விலகி சந்தோஷம் ஏற்படும். சங்கடங்கள் நீங்கும். குரு பகவான் இந்த ஆண்டு முழுவதும் சாதகமாக இருக்கிறார். ராசியை குரு பகவான் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் தான் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது.
திடீர் லாபம்
ஜனவரி முதல் மே மாதம் வரை 7 ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து உங்களுக்கு நல்லது செய்து கொண்டிருக்கிறார். அதனால், இந்த காலகட்டம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஜூன் மாதம் முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரைக்கும் குரு பகவான் ராசிக்கு 8 ஆம் இடத்துக்குப் போகிறார். அந்த காலகட்டங்களில் வெளிநாட்டு பயணங்கள், வெளிமாநில, வெளிநாட்டு வியாபாரங்கள் கிடைப்பது, திடீர் லாபம் கிடைப்பது போன்றவை உண்டாகும்.
திடீர் பண வரவு
அதே நேரத்தில் அலைச்சலும், செலவினங்களும், பணம் கொடுத்து ஏமாறுவது போன்ற விஷயங்களும் உண்டாகும். அக்டோபர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரைக்கும் குரு பகவான் 9 ஆம் இடத்துக்கு வருவதால் திடீர் பண வரவு, செல்வாக்கு, பெரிய பதவிகள் கிடைக்கும் யோகம் உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் வெற்றியைக் கொடுக்கும் வகையில் சாதகமாக ராகு அமர்ந்திருக்கிறார்.
புது முயற்சி
டிசம்பர் 5 ஆம் தேதி வரைக்கும் ராகு உங்களுக்கு 3 ஆம் இடத்தில் இருக்கப் போவதால் புது முயற்சிகள் பழிக்கும். தொட்டது அனைத்தும் துலங்கும். டிசம்பர் 5 ஆம் தேதிக்குப் பிறகு 2 ஆம் இடத்தில் வருவதால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. கேது பகவான் உங்களுக்கு ஓரளவு நல்ல நிலைமையில் இருக்கிறார். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
பகை வேண்டாம்
அப்பாவை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனத்தைப் பார்த்து பயன்படுத்த வேண்டும். இந்த வருடத்தில் சுக்கிரன் சுமாராக இருப்பதால் ஏப்ரல் 19 முதல் மே 16 ஆம் தேதி வரைக்கும் சுக்கிரன் 6 இல் மறைவதால் அந்த காலகட்டத்தில் சிறு சிறு விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
பண விஷயத்தில் கவனம்
செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரைக்கும் 8 இல் மறைவதால் பணம், கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சகோதர வகையில் சிறிய இழப்புகள், ஏமாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த 2026 ஆம் ஆண்டு வியாபாரம், உத்தியோகம் அருமையாக இருக்கும். நினைத்தது நடக்கும். பிரித்யுங்கரா தேவி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். உளுத்தம்பருப்பு தானமாகக் கொடுப்பது நல்லது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications