2018 புத்தாண்டு: மேஷம் முதல் மீனம் வரை அதிரடி பலன்கள் - பரிகாரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2018-ல் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

  சென்னை: 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்து விட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்கள், புத்தாண்டு சபதங்களுடன் உற்சாகமாக கொண்டாடியிருப்பீர்கள். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்களை கூறியுள்ளார் ஜோதிடர்குருஜி ஸ்ரீ ராஜீவ் சிவம்.

  மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கும் இது பொதுவான பலன்தான். அவரவர்களுக்கும் நடைபெறும் தசாபுத்தியின் படி சிலருக்கு பலன்கள் மாறலாம்.

  நவகிரகங்களின் நல்லாசியுடன் இந்த புத்தாண்டை தொடங்குங்கள். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி மட்டுமே அக்டோபரில் நடக்கிறது. சனி, ராகு கேது பெயர்ச்சியில்லை.

  மேஷம்

  மேஷம்

  மேஷ ராசிக்காரர்களே... குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் வரும் அக்டோபர் 11, 2018 வரை நல்ல நிலையில் சஞ்சாரம் செய்கின்றார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் நல்ல செய்தியே ஆகும். கேது செவ்வாய் சேர்க்கை உங்களது கோபத்தை அதிகரித்தாலும், வளர்ச்சியை பாதிக்காது.

  இப்பொழுது உங்களது சங்கடங்கள் அனைத்தும் 2018ல் ஒரு முடிவுக்கு வர போகின்றது. உங்களது உத்தியோகத்திலும் நிதி நிலையிலும் நிலவி வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி இப்பொழுது நீங்கள் ஒரு நல்ல முன்னேற்றமான பாதையை காண்பீர்கள். உங்களது குடும்பத்தினரோடு நல்ல உறவில் அக்டோபர் மாதம் வரை இருப்பீர்கள்.

  2018 ஆம் ஆண்டின் (நவம்பர் மற்றும் டிசம்பர் 2018) மாதங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற மாற்றங்களையும் சவால்களையும் கொண்டு வரலாம்.

  பரிகாரம்

  வில்வ மரத்திற்கு பூஜை செய்யவும். அதிகாலையில் சூர்ய பகவானை வணங்கி, தாம்பிர செம்பில் ஜலம் அர்பணிக்கவும். நன்மை உண்டாகும்.

  ரிஷபம்

  ரிஷபம்

  ரிஷபம் ராசிக்காரர்களே... இந்த 2018ஆம் ஆண்டு, குரு பகவான் அக்டோபர் 11, 2018 வரை உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் அஸ்த்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். செவ்வாய் 9ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைவது நல்ல நிலை சூழலை குறிக்காது.

  இந்த கிரகங்களின் நிலைப்பாடு எதிர் மறை சக்த்திகளை அதிகம் வெளிப்படுத்துவதால் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சவாலாகவே இருக்கும். உங்கள் குடும்பம், உடல் நலம், நிதி நிலை மற்றும் உத்தியோகம் பாதிக்கப்படும். போதுமான மருத்துவ, வாகன மற்றும் சொத்து காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள், நவம்பர் மற்றும் டிசம்பர் 2018, குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  பரிகாரம்

  செவ்வாய்க்கிழமையன்று சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு கோவிலில் விளக்கு ஏற்றுங்கள்.
  ஆஞ்சநேயருக்கு தினமும் பூஜை செய்யுங்கள்.
  சனிக்கிழமை தோறும் நவகிரஹ சன்னதியில் சனீஸ்வரனுக்கு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

  மிதுனம்

  மிதுனம்

  மிதுன ராசிக்காரர்களே... குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் இந்த 2018ஆம் வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். 7 வருடங்களுக்கு பிறகு குரு உங்கள் ஜன்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல வளர்ச்சியும் வெற்றியும் கிடைக்கும். எனினும் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் வசிக்கும் சனி பகவான் உடல் நல பிரச்சனைகள் மற்றும் தம்பதியர்களிடையே மட்டும் பிரச்சனைகளை உருவாக்க கூடும்.

  எனினும் அக்டோபர் 11, 2018 அன்று குரு உங்கள் ராசியின் ருன ரோகு ஸ்தானத்திற்கு வருவதால் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். சனி மற்றும் ராகு கடந்த வருடம் உங்களது படிப்பில் நல்ல கவனம் செலுத்த உதவி இருப்பார்கள். குரு மற்றும் சனி பகவானின் ஆதிக்கத்தால் பணப் புழக்கம் தாரளமாக இருக்கும். நிதி நிலைமை பாதுகாப்பானதாக இருக்கும். ஜூன் 2018க்குப் பிறகு கூடுதல் செலவுகள் ஏற்படும். எனினும் நீங்கள் உங்களது நேர்மறையான அணுகுமுறை மற்றும் நீடித்த முயற்சிகள் மூலம் மீண்டும் முன்னேறுவீர்கள்.

  மொத்தத்தில் இந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும்.

  பரிகாரம்

  தினந்தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லுங்கள். பைரவ பூஜை நன்மை செய்யும்.

  அரவாணிகளுக்கு, திருநங்கைகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.

  கடகம்

  கடகம்

  2017ல் நீங்கள் உங்களது வாழ்க்கையில், முக்கியமாக குடும்பத்தில் அதிக பிரச்சனைககளையும் மன சங்கடங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டிருக்கும். உளவியல் ரீதியாக நீந்தல் 2017ல் பல சங்கடங்களை சந்தித்து இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த 2018ஆம் ஆண்டு மிக சிறப்பான ஒன்றாக இருக்கும். குரு 4 மற்றும் 5ஆம் வீட்டிலும் சனி 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு பல பெரிய அதிர்ஷ்ட்டங்களை தரப் போகிறது.

  2017ஆம் ஆண்டு மாணவர்கள் பல சங்கடங்களையும் சோதனைகளையும் சந்தித்து வந்திருப்பார்கள். உங்களது மன அழுத்தம் அதிகமாகவே இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது சூழல் மாறி நீங்கள் நேர்மறை பலன்களை அடையப் போகிறீர்கள். ஆண்டின் பிற்பகுதில் வருவாய் அதிகரிக்கும்.

  வீட்டை அலங்கரிக்க அல்லது மறுசீரமைப்பிற்கு அல்லது வாகனத்திற்கென பணத்தை செலவு செய்வீர்கள். அதனால் உங்கள் வசதி பெருகும்.

  பரிகாரம்:

  மஹாதேவரை தினமும் வணங்குங்கள். ருத்ர காயத்ரி, மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபியுங்கள். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். பசு-பக்ஷிகள், நாய்களுக்கு தீனி கொடுங்கள். சனிக்கிழமை அன்ன தானம் மற்றும் ஏழை-எளியோர்களுக்கு தேவையான பொருள்கள் கொடுக்கவும்.

  சிம்மம்

  சிம்மம்

  சிம்மம் 2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

  சிம்ம ராசி அன்பர்கள் இந்த வருடம் மிக எளிதாகவும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவும் வேண்டும். 2018ல் உங்கள் வழக்கை கணிக்க முடியாததாக இருக்கும். விழிப்புடன் இருக்க வேண்டும். விரைவான சிந்தனை மற்றும் திட்டங்களை பின்பற்ற வேண்டும்.

  காதல் விவகாரங்கள் சந்தோஷத்தைத் தரும். நல்லிணக்கத்தைப் பராமரிக்க ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். உங்களது சொந்த உணர்வுகளில் எப்பொழுதும் மூழ்கி இருந்தால் மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள்.

  பரிகாரம்

  சூர்ய பூஜை செய்யுங்கள். தந்தைக்கும், தந்தை சமான பெரியவர்களுக்கும் மரியாதையுடன் அன்பு சேவை செய்யுங்கள். தார்மீக ஸ்தலத்தில் தர்மம், சேவை செய்யுங்கள். வறுமையில் இருக்கும் ஊனமுற்றோர், நோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.

  கன்னி

  கன்னி

  2018 ஆம் ஆண்டு உங்களுக்கு விசேஷமான மகிமையைக் காண்பிக்கும், ஆனால் உண்மையான மகிழ்ச்சியை நீங்கள் எளிதில் பெற முடியாது. சில மிகவும் சாதகமான போக்குகள் நீங்கள் இந்த ஆண்டு கன்னி வேலை, நீங்கள் தோல்வி இல்லாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எங்கே. உங்கள் படைப்பாற்றல், வெளிப்பாடு மற்றும் தொடர்பு திறன் ஆகியவை அக்டோபர் 2018 வரை அதிக அளவில் இருக்கும்.

  உங்கள் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். உங்களது கல்வியில் அதிகம் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். மேலும் நீங்கள் அதிகம் மதிப்பெண்களும் பெறுவீர்கள். நீங்கள் விரும்பியபடியே உங்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும்.

  மே முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டங்களில் உங்கள் வாழக்கைத் துணையுடன் சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதனால் பேச்சில் கவனம் அவசியம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி பேசுங்கள்.

  நீண்டகால வெளிநாட்டுப் பயணங்களுக்கு வாய்ப்பு தரும்.

  பரிகாரம்

  விஷ்ணு காயத்ரி, சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு பூஜை நன்மை தரும். ராகு-கேது பரிகாரம் நல்லது. பல வண்ண விரிப்புகள் ஏழை-எளியோர்களுக்கு தானம் செய்யவும்.

  துலாம்

  துலாம்

  பல ஆண்டுகளாக பல இடர்பாடுகள், வீழ்ச்சி மற்றும் அவரது குடும்ப வட்டாரத்தில் தவறாக புரிந்து கொண்டிருக்கும் ஒரு வருடம் எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் சிறிய வேறுபாடுகள் இருக்கும் என்றாலும், அவர்கள் இந்த அறிகுறி விட்டு வெளியேற போதுமான முக்கியம். யாரும் பின்வாங்குவதற்கான விருப்பத்தை யாரும் காட்ட மாட்டார்கள், ஒரு முட்டுக்கட்டை இருக்கக்கூடும். இந்த மக்கள் சமாளிக்க இந்த கடினமான கண்டுபிடிக்க முடியும், ஏனெனில் அவர்கள் எப்போதும் சமாதான மற்றும் நல்லிணக்கம் முடியும். ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண வரவுகள் காணப்படுகின்றன. குழந்தைகள், உடன்பிறப்புகள் மற்றும் கூட்டாண்மை தொழில்கள் மூலமாக லாபங்கள் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் கூட லாபம் சாத்தியமாகும். உங்கள் நிதியைப் பொறுத்த வரை ஆண்டின் இரண்டாவது பகுதி உங்களுக்கு சாதகமான காலமாக இருக்காது. உங்கள் பங்குதாரர்களால் வழக்கு விவகாரங்களைச் சந்திக்க நேரலாம். நீங்கள் இன்பத்தை அனுபவிப்பதற்கான நேரம் வரப்போகின்றது. இந்த ஆண்டு உங்கள் துணையுடனான உறவை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் மிகச் சரியான நேரம்.
  மேற்படிப்பு காரணமாக வெளியூர் செல்ல சிறந்த நேரம்.

  பரிகாரம்

  வியாழக்கிழமை தோறும் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றுங்கள். மரத்தை தொடாமல் சுற்றி வருதல் பயன் தரும். உங்களால் முடிந்த அளவு பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து சேவை செய்யுங்கள்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  2018 ஆம் ஆண்டு, சனி அல்லது சனி கிரகத்தின் 2 வது வீட்டில்தான் விருச்சிக ராசி பூஜைக்கு நிதியளிப்பார். அக்டோபர் 2018 ல், வியாழன் அல்லது குரு பகவான் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். 2017ஆம் ஆண்டு மாணவர்கள் பல சங்கடங்களையும் சோதனைகளையும் சந்தித்து வந்திருப்பார்கள். உங்களது மன அழுத்தம் அதிகமாகவே இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது சூழல் மாறி நீங்கள் நேர்மறை பலன்களை அடையப் போகிறீர்கள். நீங்கள் உங்களது தவறுகளை உணர்ந்து, தீய பழக்கத்திற்கு ஆளாகி இருந்திருந்தால், அதில் இருந்து விடு பட்டு இப்பொழுது ஒரு நல்ல நிலையில் வாழ்வீர்கள். தீய நண்பர்களின் சகவாசத்தில் இருந்து விடுபடுவீர்கள். மே மற்றும் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் கெட்டி மேளம் கொட்டும். ஆண்டின் பிற்பகுதியில் தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்தல் நல்லது.

  பரிகாரம்

  சிவனுக்கு ஸ்ரத்தையுடன் பூஜை, ஆராதனை செய்யுங்கள். ருத்ராபிஷேகம் சுபம் தரும். ஆலமரத்தின் வேர்களின் மேல் பால் கலந்த தண்ணீர் ஊற்றுங்கள்.

  தனுசு

  தனுசு

  தனுசு ராசி பூர்வீகர்களுக்கு, இந்த ஆண்டு சனி அல்லது இல்லத்தில் இருக்கும். ராகு உங்கள் 8 வது வீட்டிலேயே இருக்கிறார். வியாழன் அக்டோபரில் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார். இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் பொங்கி வழியும். ஆண்டின் ஆரம்பமே உங்களுக்கு சாதகமாகவும் முன்னேற்றத்தை தரும் வகையிலும் அமைந்துள்ளது. பல வகையிலும் வரும் பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம் பொங்கி வழியும். ஆண்டின் ஆரம்பமே உங்களுக்கு சாதகமாகவும் முன்னேற்றத்தை தரும் வகையிலும் அமைந்துள்ளது.திருமணமாகதவர்களுக்கு இந்த ஆண்டு முற்பகுதியிலேயே மூன்று முடிச்சுக்கான நேரம் வந்துவிட்டது. திருமணமான தம்பதியர்களிடையே உறவு நல்ல முறையில் இருக்கும். என்றாலும் ஆண்டின் பிற்பகுதியில் சில குழப்பங்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலும் பொறுமையும் அவசியம். ஜூன், ஜூலை, மற்றும் அக்டோபர் மாதங்களில் பல சவால்களை சந்திக்க நேரிடும். இந்தக் காலக்கட்டத்தில் தவறான புரிதல்கள் இருக்கும்.

  பரிகாரம்

  சனிக்கிழமை தோறும், சாயங்கால சமயம், அரச மரத்தின் அருகில் எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடவும். உங்கள் எடைக்கு சரிசமமான சப்த-தான்யங்கள் தானம் செய்யவும்.

  மகரம்

  மகரம்

  சனி கிரகத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே, இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி 12இல், கேது ஜென்மத்தில், ராகு 7இல் மற்றும் குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. உடல் ஆரோக்கியக்குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் உங்களுக்கு பல விதத்தில் ஆதாயம் கிடைக்க இருக்கிறது.

  நிதி நிலைமை

  இந்த ஆண்டு நிதி நிலைமை உங்களுக்கு சாதகமாக உள்ளது. நல்ல வருமானம் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். தம்பதியர்களிடையேஆண்டு முழுவதும் நல்லுறவு மேம்படும். எனினும் சில விஷயங்கள் உங்கள் உறவில் விரிசல் ஏற்படுத்தும். எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .

  பரிகாரம்

  தினமும் கணபதி அதர்வஸீர்ஷ ஸ்தோத்ர பாராயணம் செய்யவும். கணேஷ் பூஜை உகந்தது. அன்ன தானம், பக்ஷிகளுக்கு தான்யம் போடுவது, தெருவில் நாய்களுக்கு ரொட்டி பிஸ்கெட் போடுவது நன்மை தரும்.

  கும்பம்

  கும்பம்

  2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்

  கும்ப ராசி அவரைச் சுற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு மற்றும் புரிதலுடன் தனது வீட்டு வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். இது புதிய துவக்கங்களின் ஒரு காலமாக இருக்கும் என்று ஒரு புதிய குழந்தை இருக்கலாம். குடும்ப குழுவில் சில சிறிய சச்சரவுகள் இருக்கலாம் ஆனால் இந்த நபர் தனது மென்மையான பொறுமை மற்றும் விஷயங்களை நகைச்சுவை உணர்வை அடக்க முடியும். நீண்ட காலம் பல சோக முகங்கள் இருக்காது

  கல்வி

  குழந்தைகள் இந்த ஆண்டு நன்கு படித்து சாதனை படைத்தது அதற்கு வெகுமதியும் பெறுவார்கள். நிதி சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பணப் புழக்கம் அதிகரிக்கும். நீண்ட கால நிலுவையில் உள்ள கடன்கள் வந்து சேரும்.கடந்த ஆண்டு நீங்கள் கைப்பற்ற நினைத்த அனைத்தும் இப்பொழுது எளிதாகக் கிடைக்கும். சொத்து அல்லது வாகன சேர்க்கையால் திருப்தியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

  பரிகாரம்

  தான தர்மம் செய்யுங்கள். வாழ்க்கையில் அவதி படுகிறவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும். லட்சுமி-நாராயண பூஜை செய்யுங்கள்.

  மீனம்

  மீனம்

  பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். மகளின் திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்தி முடிப்பீக்ள். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நிதி பற்றாக்குறையை தவிர்க்க பணத்தை கையாளுவதில் மிகவும் கவனமாக இருங்கள்.

  பரிகாரம்:

  மஹா விஷ்ணுவிற்கு சந்தன அபிசேகம் அல்லது சந்தன திலகமிட்டு பூஜை செய்யவும். வியாழக்கிழமை விரதம் நன்மை தரும். அன்று மட்டும் வாழைப்பழத்தை உட்கொள்ளாமல், நெய்வேத்தியமாக பகவானுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாய் சாப்பிடலாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  This article explains about the yearly horoscope for the year 2018 prediction based on the Janma Rashi. Mesham To Meenam Palangal Parikarangal.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற