For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிக்கிருத்திகையில் முருகனுக்கு விரதம் இருங்க அரசனைப் போல வாழ்வு கிடைக்கும்

முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம் இருந்தாலும் அந்த ஆறுமுகனைப்போல அழகான பிள்ளை பிறக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகள

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய தினம் ஆடிக்கிருத்திகை. முருகனுக்காக பலரும் விரதம் இருக்கின்றனர். முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம் இருந்தாலும் அந்த ஆறுமுகனைப்போல அழகான பிள்ளை பிறக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைவார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை விரதம் ஏன் எப்படி எதற்காக என்றும் அந்த விரதம் இருந்து யாருக்கு என்ன நன்மை கிடைத்தது என்று பார்க்கலாம்.

உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான்.

செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கார்த்திகையின் சிறப்பு

கார்த்திகையின் சிறப்பு

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபத்தில் உதித்தவர் ஆறுமுகப்பெருமான். சரவணபொய்கையில் தாமரை மலரில் விடப்பட்ட ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். இந்த கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் விதமாக சிவபெருமான் கார்த்திக்கேயன் என்று அழைக்கப்படுகிறார்.

பிள்ளை வரம் கிடைக்கும்

பிள்ளை வரம் கிடைக்கும்

சிவன் அளித்த வரத்தின் படி இந்த கார்த்திகை நட்சத்திரம் வரும் நன்னாளில் விரதம் இருந்து முருகனை வணங்கினால்
அறிவு, செல்வம், நீண்ட ஆயுள், நிம்மதியான வாழ்க்கை, நிறைவான சொந்தங்கள், குணமுள்ள குழந்தைகள் கிடைப்பார்கள் என்பது நம்பிக்கை.

வேண்டிய வரம் கிடைக்கும்

வேண்டிய வரம் கிடைக்கும்

மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும். தை மாதம் வரும் தை கிருத்திகை, ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

அன்னதானம் செய்யுங்கள்

அன்னதானம் செய்யுங்கள்

கார்த்திகை நாளில் கந்த சஷ்டி கவசம் படிப்பது சிறப்பு. இன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு சாப்பிடலாம் அல்லது வெறும் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் குளித்து விட்டு கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து விட்டு சாப்பிடலாம்.

ஆறு மாதங்கள் விரதம்

ஆறு மாதங்கள் விரதம்

தை மாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள். அத்தனை சிறப்பு வாய்ந்தது கார்த்திகை விரதம்

கார்த்திகை விரத பலன்கள்

கார்த்திகை விரத பலன்கள்

கார்த்திகை விரதத்தை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.
கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பட்டத்தை பெற்றாராம். திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள் என்கிறது புராணம்.

English summary
Today Aadi Karthigai Special day for Lord Murugan. Karthigai vratham is one of the most fervently observed vrats in Hinduism especially in South India by married ladies who seek children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X