Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சொந்தவீடு கட்டும் யோகம் யாருக்கு இருக்கு தெரியுமா?

ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் சொகுசான வாழ்க்கையும் கிடைக்கும் என்கிறது ஜோதிட விதி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது பலரின் கனவு. அழகான வீடு, ஆடம்பரமான சொகுசான வாழ்க்கை அம்பானி போல வாழ வேண்டும் என்று பலரும் விரும்பினாலும் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சேர்க்கை பார்வை, கூட்டணியைப் பொறுத்தே அமைகிறது.

ஜனன ஜாதகத்தில் நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சொந்த வீடு, வண்டி வாகனம் என சொகுசு வாழ்வு தேடிவரும்.

நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் அமைவதைப் பொறுத்து மாடமாளிகையில் வசிக்கும் யோகம் அமைகிறது. ஒருவருக்கு சொந்த வீட்டுமனை அமைய ஜாதகத்தில் நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும்.

சொந்த வீடு கட்டும் யோகம் எல்லோருக்கும் அமையுமா என்றால் அதற்கு ஜாதகத்தில் கிரகங்களின் பார்வை, கூட்டணி நன்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். வீடு கட்டிய பின்னர் வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமைய ஜாதகத்தில் நான்காம் பாவமும், சுக்கிரனும் பல பெற வேண்டும்.

 நான்காம் வீட்டு அதிபதி

நான்காம் வீட்டு அதிபதி

சொந்த வீட்டுமனை அமைய ஜாதக ரீதியாக நான்காம் பாவம் பலமாக அமைந்திருக்கிறதா என ஆராய வேண்டும். நான்காம் அதிபதி கேந்திர ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 1,4,7,10 ஆம் இடத்து அதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றோ இருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் அமைந்தோ அல்லது 5,9 ம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தாலும் சுப ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய, 2,11 க்கு அதிபதிகளின் சேர்க்கைப் பெற்றோ இருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

சுக்கிரன் செவ்வாய்

சுக்கிரன் செவ்வாய்

நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயை பூமி காரகன் எனவும் குறிப்பிடுகிறோம். பூமி காரகன் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்று பலமாக நான்கில் அல்லது நான்காம் அதிபதியின் சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமின்றி பூமியுடன் கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

வீடு கட்டும் யோகம்

வீடு கட்டும் யோகம்

ஜென்ம லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். நான்காம் அதிபதியும், நான்காம் வீட்டையும் குரு போன்ற சுபகிரக பார்வை செய்வது நல்லது. நான்காம் வீட்டதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

கிரகங்களின் பார்வை பலம்

கிரகங்களின் பார்வை பலம்

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதனையும் நான்காம் பாவத்தின் மூலம் அறியலாம். சிலருக்கு மாட மாளிகையும், உயரமான கட்டிடங்களில் வசிக்கக்கூடிய யோகமும், சிலருக்கு ஓட்டு வீடு, குடிசை வீடு என அவரவர் நான்காம் பாவத்தில் உள்ள கிரகங்களுக்கேற்றவாறு வீடுகள் அமையும். நான்காம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகின்றதோ, நான்காம் அதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கை பெறுகின்றதோ, நான்காம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கின்றதோ அத்தனை வீடுகள் அமையக் கூடிய யோகம் உண்டாகும்.

அம்சமான அழகான

அம்சமான அழகான

சூரியன், கேது 4ஆம் வீட்டில் இருந்தால் அமையக்கூடிய வீடானது பார்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதி தன்மையற்றதாக இருக்கும்.

நான்காம் வீட்டில் சந்திரனிருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடும் அமையும்.

நான்கில் குரு இருந்தால் மிகவும் உறுதியான தரமிக்க வீடு அமையும். புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்கு தீயினால் பாதிப்புகள் உண்டாகும். சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4ம் வீட்டையோ, 4ம் அதிபதியையோ, சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

 அசையா சொத்து யோகம்

அசையா சொத்து யோகம்

ஒருவருக்கு நான்காம் அதிபதி பலம் பெற்று அமைந்திருந்து அதனுடைய திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், நான்கில் பலமாக அமையப்பெற்ற கிரகத்தின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் திசை அல்லது புத்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையாச் சொத்து யோகம் உண்டாகும்.

சொத்துக்கள் வாங்க முடியாது

சொத்துக்கள் வாங்க முடியாது

ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 6,8,12 ல் மறைவுப் பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்றிருந்தாலும், சனி போன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்தவீடு அமைய தடை உண்டாகும். 4ம் அதிபதி நீசம், அஸ்தங்கம், பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தால் வீடு, அசையா சொத்துக்கள் அமையாது.

சொகுசு வாழ்க்கை

சொகுசு வாழ்க்கை

சொந்த வண்டி வாகனம் வாங்கவும் நான்காம் பாவம் பலம் பெற்றிருக்க வேண்டும். நவகிரகங்களில் வண்டி, வாகன காரகன் சுக்கிரனாவார். ஒருவரது ஜாதகத்தில் நான்காம் பாவமும், சுக்கிரனும் பலம் பெற்றால் வண்டி, வாகன யோகம் சிறப்பாக அமையும். ஜனன ஜாதகத்தில் நான்காம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு தேடிவரும். நான்காம் வீட்டை குரு, சுக்கிரன் பார்வையிட்டாலும் சொகுசு வாழ்க்கை அமையும். செவ்வாய்க்கு அதிபதி முருகனையும், சுக்கிரனுக்கு அதிபதி ஸ்ரீரங்கநாதரையும் வணங்க சொந்த வீடும் சொகுசான வாழ்க்கையும் தேடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+