Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம்

ஆகஸ்ட் மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமும் யோகமும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் கடகம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன், சுக்கிரன், செவ்வாயின் பயணம் சாதகமாக இருப்பதால் வெற்றிகளும் அதிர்ஷ்டங்களும் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. பதவியில் முன்னேற்றம் ஏற்படும்.

வெற்றிகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். குருவின் பார்வை இருப்பதால் முயற்சிகளுக்கு வெற்றி தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். சிந்தனையில் தெளிவு பிறகும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். திருமண சுப காரியம் தொடர்பாக பேசுவீர்கள். பெரியவர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிர்பார்ப்புகள்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலை தொழில் அமையும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வருமானம் வரும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கும்.

 வேலையில் புரமோசன்

வேலையில் புரமோசன்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் புதனுடன் பயணம் செய்கிறார். தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியனால் பதவியில் மாற்றம் வரும். சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். கூடவே பயணம் செய்யும் புதன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. மாத முற்பகுதியில் பத்தில் புதன் பயணம் செய்கிறார். வேலையில் திறமை பளிச்சிடும். வெளியூர், வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு தேடி வரும். உங்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

 திருமணம் பேசலாம்

திருமணம் பேசலாம்

சுக்கிரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். ஆகஸ்ட் 11ஆம் தேதி சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி விரைய ஸ்தானத்திற்கு வந்து நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இந்த இடமாற்றத்தினால் தொலைதூர பயணங்கள் ஏற்படும். சுப செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வீட்டு சுப காரியங்களில் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதிகளில் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பதவியில் முன்னேற்றம் வரும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் செவ்வாயுடன் சூரியன் இணைகிறார். திருமணம் சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும். இதுநாள் வரை தடைபட்டு வந்த சுபகாரியங்கள் கை கூடி வரும்.

 ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்


துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனி உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். மொத்தத்தில் ஆகஸ்ட் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும் காலமாக அமைந்துள்ளது.

 பண வரவு அதிகரிக்கும்

பண வரவு அதிகரிக்கும்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு ராசிநாதன் செவ்வாய் அற்புதமான நிலையில் பயணம் செய்கிறார். நல்ல வேலை தொழில் அமையும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொந்தங்களுடன் இணையக்கூடிய நேரம் வந்து விட்டது. வம்பு வழக்குகள் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும்.
பாக்ய ஸ்தானத்தில் சூரியன், புதன் பயணம் செய்வதால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வருகிறது. தொழில் முன்னேற்றம் லாபம் கிடைக்கும். பத்தாவது வீட்டில் சுக்கிரன் செவ்வாய் பயணம் செய்வதால் பதவியில் புரமோசன் கிடைக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். சிலருக்கு புதிய வேலை தேடி வரும்.

மாதம்

மாதம்

பத்துக்கு உரிய சூரியன் மாத பிற்பகுதியில் பத்தாவது வீட்டில் புதனுடன் இருப்பதால் ஆதாயங்கள் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் சனி 3வது வீட்டில் பயணம் செய்கிறார். குரு நான்காவது வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் பத்தாவது வீட்டினை குரு பார்வையிடுகிறார். வேலை, திருமண விசயங்களில் வெற்றிகள் கிடைக்கும். தடைகள் நீங்கி சுப காரியம் கைகூடி வரும். பண வரவு அதிகமாக கிடைப்பதால் சேமிப்பும் கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். ஆகஸ்ட் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் அதிகம் நடைபெறும் மாதமாக அமைந்துள்ளது.

 வருமானம்

வருமானம்

புதன் சூரியன் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்தின் மீது விழுகிறது. புதன் 9ஆம் தேதி பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டங்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் ராசி நாதன் குரு மூன்றாவது வீட்டில் பயணிப்பதால் வெற்றிகள் தேடி வரும். சுபமான மாதமாக உள்ளது. தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்கிறது. மாத பிற்பகுதியில் ஒன்பது, பத்தாம் அதிபதிகள் வலுவடைந்திருப்பதால் அபரிமிதமான வருமானம் வரும். சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்கும். பெண்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். கூடுதல் நன்மை ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் பாக்ய ஸ்தானத்திற்கு வருவதால் அறிவுக்கூர்மை அதிகரிக்கும். செவ்வாய் பாக்ய ஸ்தானத்தில் சூரியன், புதனோடு இணைவது சிறப்பு. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். வெளியூர் பயணங்கள் நன்மைகளைத் தரும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும்.

 பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

குடும்ப ஸ்தானத்தில் உள்ள சனியால் வாக்கில் கவனம் தேவை. தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுத்துக்கொள்ள வேண்டாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வங்கி சேமிப்பு கை கொடுக்கும். குருவின் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால் திருமணம் கை கூடி வரும். குரு பலன் வந்துள்ளதால் புத்திர பாக்கியமும் கை கூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் மாத முற்பகுதியில் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரும். உடல் சோர்வும் மந்த நிலையும் ஏற்படும் கவனம் தேவை. புதிய முயற்சிகளுக்கு வெற்றிகளுக்கு கிடைக்கும் மாதமாக ஆகஸ்ட் மாதம் அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+