தீபாவளி ராசி பலன்: மகாலட்சுமியின் அருள்.. குபேர யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம், சுவையான உணவுகள் அனைவரின் வீடுகளிலும் அவசியம் இருக்கும். மகாலட்சுமியின் அருள் நிறைந்த தீபாவளி திருநாளில் நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

தீபாவளி: நவ கிரகங்களும் தீபாவளி திருநாளில் சூரியன், செவ்வாய், சந்திரன் துலாம் ராசியில் பயணம் செய்ய புதன் விருச்சிகத்தில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் குரு, கும்பம் ராசியில் சனி, மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது, சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமியின் அருளை வாரி வழங்கப்போகிறது.

Deepavali Rasi Palan: Who will get sudden luck and Jackpot blessings of Mahalakshmi

மேஷம்: தீபாவளி திருநாள் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய நாளக அமையப்போகிறது. பேரும் புகழும் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு சமுதாயத்தில் அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும் உயரும். குபேர பகவனின் அருள் நிறைந்த இந்த நாளில் உங்களின் பொருளாதாரம் முனனேற்றமடையப்போகிறது. அடிக்கடி விமானத்தில் பறக்கப் போகிறீர்கள். வேலையில் இருந்த அலைச்சல்கள் நீங்கும். நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது. சனியின் பயணமும் பார்வையும் லாபத்தை கொட்டி கொடுக்கப்போகிறது. ராஜ கிரகங்களின் பார்வை

ரிஷபம்: சுக்கிரபகவானின் அருள் நிறைந்த ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிறைந்த நாள். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம் ஆறாம் வீட்டில் கிரகங்கள் உள்ளன. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நீச்ச நிலையில் கேது உடன் பயணம் செய்தாலும் மகாலட்சுமியின் அருள் நிறைந்த நாளில் பொருளாதார நிலை உயர்வதற்கான நல்ல செய்தி தேடி வரும். விரைய குரு கோடி செல்வத்தை தரப்போகிறார். சொந்த பந்தங்களுடன் கூடி இருக்கும் இந்த நாளில் குபேர யோகம் கிடைக்கப்போகிறது.

மிதுனம்: தீப ஒளி திருநாளில் உங்களின் புத்திசாரித்தனம் அதிகரிக்கும் சொத்து சேர்க்கை ஏற்படும். லாப குரு உங்களுக்கு நிறைய லாபத்தை தரப்போகிறார். பொருளாதார நிலை உயரும். சமுதாயத்தை மதிப்பு மரியாதை கூடும். எதிர்பார்த்த பண வருமானம் கிடைக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். மகாலட்சுமியின் அருள் வீடு தேடி வரப்போகிறது.

கடகம்: சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே பதவி யோகம் தேடி வரப்போகிறது. புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. அஷ்டமத்து சனி காலமாக இருப்பதால் பண முதலீடுகளில் கவனம் தேவை. பொருளாதார நிலை மேம்படும். பாராட்டுகளும் பரிசும் கிடைக்கக்கூடிய நாளாக தீபாவளி திருநாள் அமைந்துள்ளது.

சிம்மம்: சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம் வேலை செய்யும் இடத்தில் பேரும் புகழும் கிடைக்கும். கோடிக்கணக்கில் பண வருமானம் தேடி வரப்போகிறது. குரு பகவான் பார்வை நிறைந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும் நாளாக தீபாவளி திருநாள் அமைந்துள்ளது.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ராசியில் அமர்ந்துள்ள கேது, இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ள சூரியன், செவ்வாய், பண வருமானத்தை தரப்போகிறது. பண வருமானம் அதிகம் வந்தாலும் செலவுகளும் கூடுதலாக இருக்கும். தீபாவளி பண்டிகை நாளில் நல்ல செய்தி ஒன்று தேடி வரப்போகிறது. குபேரன் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வணங்குங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+