குரு பெயர்ச்சி பலன் 2022: புதிய வேலை,புரமோசன் யாருக்கு கிடைக்கும் - பரிகாரம் என்ன
குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் யாருக்
சென்னை: நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் சுப கிரகம். பங்குனி 30ஆம் தேதி, ஏப்ரல் 13ஆம் நாள் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.12 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். குருபகவானின் அருளினால் சிலருக்கு அதிக நன்மை நடைபெறப்போகிறது.
நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், புரமோசன், சம்பள உயர்வு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மிதுனம் - தொழில் குரு
மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் வேலையில் மாற்றம் உண்டாகும். சிலருக்குப் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். குருவின் பார்வை சாதகமாக உள்ளதால் வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். நவகிரக குருபகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

கடகம் - பாக்ய குரு
கடகம் ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்தில் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். வியாழக்கிழமை குருபகவான் வணங்க வேலையில் நிம்மதி ஏற்படும்.

கன்னி - களத்திர குரு
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும். வேலை, தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் செயல்பாடுகளால் அலுவலகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்பெறுவீர்கள். அதிகாரியை கூல் செய்ய குருபகவானை சரணடையுங்கள்.

துலாம் - ருண ரோக சத்ரு குரு
துலாம் ராசிக்காரர்களே ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுகிறது. வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். இந்த குரு பெயர்ச்சி மகிழ்ச்சிகரமானதாக அமையப்போகிறது. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம் -பூர்வ புண்ணிய குரு
குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்கவும்.
-
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
குருப்பெயர்ச்சி: கடக ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலை, வருமானத்தில் முன்னேற்றம்! -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications