Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2023: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 5 ராசிக்காரர்கள்..பாதிப்புக்கு என்ன பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் நாளை 22/4/2023 சித்திரை 9 ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து கால புருஷ முதல் ராசியான மேஷத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது பாதிப்பிற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் கணித்துள்ளார் திருப்பூர் ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்,திருவருள் ஜோதிடகல்வி மைய மாணவர் ஜோதிட சாம்ராட் P.P.சதீஸ்குமார்.

மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் குருபகவான் சுமார் 375 நாட்கள் அதாவது 1/5/2024 சித்திரை மாதம் 18 ம் தேதி புதன்கிழமை மதியம் 1.02 மணி வரை மேஷ ராசியில் பயணிக்கப் போகிறார். இதில் பெயர்ச்சியான நாளிலிருந்து 5 நாட்கள் அதாவது 26/4/2023 வரை குருபகவான் சூரியனுடன் 11 பாகைக்குள் பயணிப்பதால் அஸ்தமன நிலையில் இருப்பார். அதற்குப் பின் மீதம் 370 நாட்கள் குருவுக்கு அஸ்தமன தோஷம் கிடையாது.

Guru Peyarchi palan 2023: 5 zodiac signs who will be drenched in lucky rain what is the remedy for suffering

அடுத்து வக்ர நிலையில் 5/9/2023 ஆவணி மாதம் 19 ம் தேதி முதல் 31/12/2023 மார்கழி மாதம் 15 ம் தேதி வரை சுமார் 118 நாட்கள் வக்ரநிலையில் பயணிப்பார். அதன் பின்பு மீண்டும் நேர்கதியில் பயணிப்பார். இந்த குருபெயர்ச்சியில் 2 ம் இடத்தில் பயணிக்கும் மீன ராசிக்காரர்களுக்கும்,5 ம் இடத்தில் பயணிக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கும்,7 ம் இடத்தில் பயணிக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கும்,9 ம் இடத்தில் பயணிக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கும்,11 ம் இடத்தில் பயணிக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கும் சாதகமான காலங்களாக அமையும்.

குறிப்பாக குருபகவானின் பார்வை படும் சிம்மம்,துலாம்,தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான காலங்களாக அமையும். மேற்குறிப்பிட்ட. மீனம்,தனுசு,துலாம்,சிம்மம்,மிதுனம் ராசிக்காரர்களுக்கு லக்ன யோகாதிபதி திசையோ,புத்தியோ நடப்பில் இருந்தால் சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கலாம்.மாறாக லக்ன பாதகாதிபதி திசையோ,புத்தியோ நடப்பிலிருந்து கெடுபலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் கெடுபலன்கள் குறைந்து ஓரளவு நற்பலன்கள் உண்டாகும். மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு திருமணத்தடை,புத்திர பாக்கியத்தடை,வீடு,மனை அமைவதில் தடை,காரியத்தடை,தொழில் மற்றும் வேலையில் பொருளாதாரத் தடைகள் நீங்கி குருபகவானால் சுபகாரியங்கள் உண்டாகும்.

Guru Peyarchi palan 2023: 5 zodiac signs who will be drenched in lucky rain what is the remedy for suffering

மேலே குறிப்பிடாத மற்ற ராசிகாரர்களுக்கு சுய ஜாதகத்தில் நடப்பில் இருக்கும் திசை மற்றும் புத்திக்கேற்ப நன்மை,தீமைகளில் மத்திமமான பலன்கள் உண்டாகும். குருவின் பார்வைபடும் ராசிகளான சிம்மம்,துலாம்,தனுசு ராசிகளில் கிரகங்கள் இருந்து திசையோ புத்தியோ நடப்பில் இருந்தால் யோகாதிபதி கிரகங்களாக இருந்தால் நற்பலன்களை கூட்டிக் கொடுக்கும். பாதகாதிபதி கிரகங்களாக இருந்தால் கெடுபலன்களை குறைத்துக் கொடுக்கும்.

மீனம்,தனுசு,துலாம்,சிம்மம்,மிதுனம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு வளர்பிறைச் சந்திரன் மற்றும் பௌர்ணமி சந்திரனாக இருந்து சந்திர திசை மற்றும் புத்தி நடப்பில் இருந்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.
மனஉறுதி,மனவலிமை,புத்தியில் தெளிவை கொடுக்கும்.யோக திசை நடப்பில் இருந்தாலும் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.

Guru Peyarchi palan 2023: 5 zodiac signs who will be drenched in lucky rain what is the remedy for suffering

எந்த லக்னமாக இருந்தாலும் பெயர்ச்சியாகும் குருவின் பார்வை படும் ராசிகள் உங்கள் லக்னத்திற்கு எந்தப் பாவகமாக வருகிறதோ அந்த பாவக பலன்களையும்,கிரகங்கள் நின்றால் அந்த கிரகத்தின் காரக பலன்களையும்,கிரகங்கள் நின்று தசையோ புத்தியோ நடப்பில் இருந்தால் அந்த கிரகத்தின் ஆதிபத்திய பலன்களும் கோச்சார குரு கொடுப்பார்.

உதாரணத்திற்கு மேஷ ராசிக்கு தற்போது பெயர்ச்சியாகும் குரு பகவான் ஜென்மத்தில் வருகிறார். குருவின் பார்வைபடும் சிம்ம ராசி ராசிக்கு 5 ம் பாவகமாக வருவது மேஷ ராசிக்காரர்களுக்கு புத்திர பாக்கியத்தையும்,புத்திரர்கள் மூலம் ஆதாயமும்,மேன்மையும் உண்டாகும். இதேபோல் லக்கினத்திற்கு எந்த பாவகமாக வருகிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

Guru Peyarchi palan 2023: 5 zodiac signs who will be drenched in lucky rain what is the remedy for suffering

ரிஷப ராசிக்கு குருபகவான் விரயஸ்தானத்தில் வந்தாலும் குருவின் பார்வைபடும் சிம்மராசி ராசிக்கு 4 ம் பாவகமாக வருவதால் லக்னரீதியாக யோக திசை நடப்பில் இருந்தால் வீடு வண்டி வாகன யோகம் நிச்சயம் அமையும். அதாவது விரைய குருவை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இச்சமயத்தில் லக்ன ரீதியாக 4 ம் பாவக தொடர்புடைய கிரகங்களின் திசையோ,புத்தியோ நடப்பில் இருந்தால் வீடு,மனை,வாகனங்கள் வாங்கலாம். 2 மற்றும் 11 ம் பாவக தொடர்புடைய கிரகங்களின் திசை,புத்தி நடப்பிலிருந்தால் வங்கியில் கடன் பெற்று கூட மேற்சொன்ன காரியங்களை செய்யலாம்.

இந்த ரீதியில் குருபெயர்ச்சி பலன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய அனுபவக் கருத்தாகும் நண்பர்களே.விருச்சிக ராசிக்கு கோச்சார குரு 6 ம் இடத்திற்கு வந்தாலும் பார்வைபடும் சிம்மம் ராசிக்கு 10 ம் இடமாக வருவதால் சிம்மத்தில் கிரகங்கள் இருந்து திசை,புத்தி நடப்பிலிருந்தால் சொந்தத் தொழிலில் உயர்வை கொடுக்கும்.
இதே போல் 12 ராசிகளுக்கும் உங்கள் சுய ஜாதகத்தில் நடக்கும் திசை,புத்தி மற்றும் குருவின் பார்வைபடும் ராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும்.

Guru Peyarchi palan 2023: 5 zodiac signs who will be drenched in lucky rain what is the remedy for suffering

இந்த ரீதியில்தான் குரு பெயர்ச்சி பலன்களை உங்கள் சுய ஜாதக தசா புத்திகளோடு ஒப்பிட்டு பலன்களை அறிந்து கொள்ள வேண்டும்.மேலே குறிப்பிட்டுள்ள 5 ராசிகளுக்கு மட்டும்தான் நன்மையான பலன்கள் உண்டாகும் என்றும்,மற்ற ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியினால் நற்பலன்கள் இல்லை என்றும்,பொதுவான ராசி பலன்களை வைத்து தோராயமாக தெரிந்து கொள்ளாமல் உங்கள் சுய ஜாதகத்தை ஆய்வு செய்து குரு பெயர்ச்சியினால் உண்டாகும் நன்மை,தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.மேலே குறிப்பிடாத மற்ற ராசிக்காரர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.

உங்கள் சுய ஜாதகத்தில் நடப்பில் இருக்கும் திசை மற்றும் புத்தியே நன்மை,தீமைகளை தெளிவாக தீர்மானிக்கும். குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி வரும் நாட்களிலோ,வியாழக்கிழமைகளிலோ,அல்லது உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளிலோ குருஸ்தலங்களான திருச்செந்தூர் முருகன்,ஆலங்குடி குருபகவான்,தென்குடித்திட்டை போன்ற ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.சித்தர்கள்,ஜீவசமாதிகள், மகான்கள் வழிபாடுகளும் மிகச் சிறப்பான பலன்களை கொடுக்கும்

ஜோதிட சாம்ராட் P.P. சதீஸ்குமார்
ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்
திருப்பூர்.

9842757275
9159751597

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+