Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023.. குருவை விட்டு பிரியும் ராகு.. ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் உள்ள ராகு குரு கூட்டணி பிரியப்போகிறது. கடந்த ஆறு மாதகாலமாக குரு ராகு கூட்டணியால் பலவித பிரச்சினைகளை சந்தித்த ராசிக்காரர்கள் இனி நிம்மதியையும் மகிழ்ச்சியும் அடையப்போகிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் வாழ்வின் உச்சத்திற்கும் செல்லப்போகின்றனர். குரு பகவான் வக்ரநிலையில் பயணம் செய்யப்போகும் காலத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு உங்கள் ராசியில் பயணம் செய்வதால் புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.

Guru peyarchi palan 2023 : Guru Vakra Peyarchi period who will get Rajayogam

குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ஜென்ம ராசிக்குள் குருவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள்.

ரிஷபம்: தனித்த குரு 12 ஆம் பாவமான விரையம் மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை பார்க்கப் போவதால் ஏழரை சனியால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் தடுமாறி தலைமறைவாகிய உங்களுக்கு கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். 6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த நோய் நொடி சிக்கு பிணி கேடுகள் மறையும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள். 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டு தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி சேமிப்பு அதிகரிக்கும்.

மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானமான மூத்த சகோதரம், லாபம், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ஆம் பாவத்திற்கு மாறுகிறார். ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்தது. அதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்த பொழது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள் உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய குரு உங்க ராசிக்கு முழுமையான சுபராவார்.அவர் லாப ஸ்தானம் ஏறி. 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும் அடுத்து பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார்.ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார்.களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஒரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பத்தில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் குரு வந்தால் பதவி நாசம் என்பார்கள். எல்லோருக்கும் பதவி போய் விடாது பதவியில் சுகமும் தேடி வரும். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள்.வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார்.தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள்.கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும்.புது முயற்சிகள் கை கூடும்.தொழில் அபிவிருத்தி ஏற்படும். செய் தொழில் வளர்ச்சி பெறும். சிவன் கோயிலில் உள்ள நவகிரக சன்னிதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசிப்பது நல்லது.

சிம்மம்: குரு பகவான் ஒன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். ஐந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். மூன்றாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும்.மன ஆழத்தம் அச்ச உனர்வு ஆகியவை நீங்கும்.அடுத்தது பூர்வபூண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நிண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும்.உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும். பெருமாள் கோயில் வழிபாடு நன்மை தரும். சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.

கன்னி: குரு பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். கிணற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது. குருபகவான் கெடுதலை செய்ய மாட்டார். மேஷ ராசியில் இருக்கும் குரு பகவான் 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும்.அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி குருவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும்.சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும்.வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும்.பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும்.கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குருபகவான் பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ஆம் வீட்டில் உள்ள குரு உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+