Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் ரிஷபத்திற்கு வரும் ஜென்ம குரு.. சந்திக்கப்போகும் சவால்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை மாதம் குரு பகவான் மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் பலரது வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி ரிஷபம்: ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். தேவ குருவான வியாழ பகவான் அசுர குருவான சுக்கிரன் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். ஜென்ம ராசியில் அமரப்போகும் குரு ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறார். விரைய ஸ்தானத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்ய போது நிறைய சுப விரைய செலவுகள் ஏற்பட்டது. ஜென்ம ராசியில் அமரப்போகும் உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடப்போகிறது. இடமாற்றம் ஏற்படப்போகிறது.

Guru peyarchi palan 2024 Krodhi Tamil New year Guru peyarchi palan for Rishabam Rasi

குரு பகவான் பார்வை: குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழப்போகிறது. பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். திருமண பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதியதொரு மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். குரு பகவானின் பார்வை 5ஆம் வீட்டில் உள்ள கேதுவின் மீது விழுவதால் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

லாபம் அதிகரிக்கும்: தொழில் போட்டிகள் நீங்கும். வியாபாரம் சிறக்கும் லாபம் அதிகரிக்கும். 7ஆம் வீட்டின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் வீடு, இடம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. குரு பலன் வந்து விட்டதால் குழந்தை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரப்போகிறது. காதலித்துகொண்டிருப்பவர்களுக்கு வீட்டில் பெற்றவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யும் நல்ல காலம் கைகூடி வரப்போகிறது.

வேலையில் முன்னேற்றம்: குரு பகவான் பார்வை 9ஆம் வீட்டின் மீது விழப்போவதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. 8 மற்றும் 11ஆம் வீட்டிற்கு அதிபதியான குரு குரோதி ஆண்டில் உங்கள் ராசியில் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் நிச்சயம் இடமாற்றத்தை தரப்போகிறார். சவால்களை சந்திக்கப்போகிறீர்கள். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப கவுரவப்பதவிகள் தேடி வரப்போகிறது.

பாராட்டுகள் குவியும்: பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் கவனம் தேவை. சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. தெரியாத தொழிலில் இறங்கி அதிக முதலீடு செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள். எந்த காரியம் செய்வதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. குரு தசை நடந்தால் கோடீஸ்வர யோகத்தை கொட்டிக்கொடுப்பார் குரு பகவான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+