குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் தேடி வரும் கோடீஸ்வர யோகம்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு?
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த குருப்பெயர்ச்சி திடீர் ஜாக்பாட் யாருக்கு அடிக்கப்போகிறது. கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.
மேஷம்: குடும்ப குருவினால் லாபம் குரு பகவானின் பார்வை 6,8,10ஆமிடங்களில் பார்வை படுவதால் எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பாடி திருவலிதாயம் குரு பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: ஜென்ம குரு கவனம் தேவை. குருவின் பார்வை 5,7,9ஆமிடங்களில் விழுவதால். திருமணம் சுபகாரியம் கைகூடி வரும். குழந்தைகளால் பெருமையும் புகழும் கூடும். பிள்ளைகளுக்கு நல்ல செய்தி தேடி வரும். ஜென்ம குருவாக இருப்பதால் எப்போதும் உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். குரு பகவானை மஞ்சள் வஸ்திரம் சாற்றி கொண்டைக்கடலை வைத்து வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்: விரைய குருவால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும் உங்கள் ராசிக்கு 4,6,8 ஆமிடங்களில் குருவின் பார்வை படுகிறது. உங்களில் சிலர் கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள். புதிய வாகனங்கள் அமையவும் வாய்ப்பு உண்டு. உறவினர்களுடனான பகை நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுங்கள்.
கடகம்: லாபகுருவினால் வருமானம் கூடும் ராசிக்கு 3,5,7ஆமிடங்களில் பார்வை விழுகிறது. குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்: தொழில் ஸ்தான குருவால் நன்மை அதிகரிக்கும். குருவின் பார்வை 2,4,6ஆமிடங்களின் மீது விழுகிறது. உங்கள் திறமையையும், பெண்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். உங்களின் உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தஞ்சை மாவட்டம் தென்திட்டை ராஜ குருவை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி: பாக்ய ஸ்தான குரு பகவானால் பலன் அதிகம். உங்கள் ராசியின் மீதும் 3,5ஆமிடங்களின் மீதும் குருவின் பார்வை விழுகிறது. தள்ளிப் போன திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களை கட்டும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பாடி திருவலிதாயம் குரு பகவானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications