குரு பெயர்ச்சி பலன் 2024: பண மழை பொழியப்போகும் லாப குரு.. யார் வீட்டில் பொன்மழை பொழியும்
சென்னை: குரு பகவான் மே 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு யோக காலம் தேடி வரப்போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் கடக ராசியில் பிறந்த ராசிக்காரர்களுக்கு இன்னும் ஓராண்டு காலத்திற்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
கடகம்: உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் மேன்மைகளும் நன்மைகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும் உங்களின் செல்வாக்கு உயரும். கோடி கோடியாக செல்வம் குவியப்போகிறது.

குருவின் பார்வை: கடக ராசிக்கு மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுகிறது. தைரிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் உங்க தைரியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பிசினஸ் மூலம் நல்ல லாபம் வரும். குரு பகவான் களத்திர ஸ்தானத்தை பார்வையிடுவதால் கவலைகள் காணாமல் போகும்.
ஒளிமயமான எதிர்காலம்: குறிக்கோளை அடைவீர்கள். பூர்வ புண்ணியத்தின் மீது குருவின் பார்வை படுவதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகள் ஜெயிப்பார்கள். வேலை கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். கவுரவம் தேடி வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மேன்மைகளையும் லாபத்தையும் தரும். மாணவர்களுக்கு நீங்கள் விரும்பும் உயர்கல்வி தேடி வரும். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள்.
லாப குருவின் பயணம்: உங்களுக்கு வரவேண்டிய பணம் தக்க நேரத்தில் வந்து சேரும். பழைய கடனை பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். இளைய சகோதரியின் தடைப்பட்ட திருமணம் சிறப்பாக முடியும். 11ஆம் வீட்டில் குரு பயணம் செய்வதால் மூத்த சகோதரர் உற்ற துணையாக இருப்பார். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் மூலம் பணம் வரும்.
திருமணம் சுபகாரியம்: உங்களின் 3ஆம் வீட்டை குரு பார்ப்பதால், இளைய சகோதர வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டினை குரு பார்ப்பதால், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெகுநாட்களாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவர். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும்.
வருமானம் அதிகரிக்கும்: கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணம் செய்யும் காலத்தில் திடீர் பண வருமானம் வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் குரு பயணம் செய்யும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். வெளிநாடு வேலை கிடைக்கும். பல வழிகளில் வருமானம் வரும். குரு பகவான் வக்ரமடையும் காலங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் பல வழிகளிலும் லாபம் அதிகரிக்கும்.
பொற்காலம்: வேலையில் இருப்பவர்களுக்கு ஆண்டு இறுதியில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். கம்யூட்டர் துறையில் வேலை செய்பவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு தேடி வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி அதிக பண வருமானத்தை தரக்கூடிய பொன்மழை பொழியக்கூடிய குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications