Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் இடம் மாறும் குரு.. வேலையில் திடீர் இட மாற்றம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரோதி தமிழ் புத்தாண்டில் முதல் கிரகப்பெயர்ச்சியாக குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் மே மாதம் 1ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகும் குரு பகவானால் யாருக்கெல்லாம் வேலையில் இடமாற்றம், புரமோசன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாவது வீடான தன வாக்கு ஸ்தானத்திற்கு செல்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குருவின் பயணமும் பார்வையும் உங்களுக்கு அஷ்டலட்சுமி யோகத்தை தேடி தரப்போகிறது. குரு பகவான் பார்வை பத்தாம் வீட்டின் மீது விழுவதால் சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும்.

Guru peyarchi palan 2024 Tamil Mesham to Meenam Who will get good Job Promotion and Transfer

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசிக்கு குரு வருகிறது ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். குருவின் பார்வையானது 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு மே மாதம் முதல் சம்பள உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும்.

மிதுனம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டிற்கு வரப்போகிறார். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நோய்கள் நீங்கும். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. பண விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கப் போகிறது. ராஜ யோகத்தை தரப்போகிறது. புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வெற்றி மீது வெற்றி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு மே மாதம் முதல் பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். புரமோசனுடன் கூடிய பதவி யோகம் தேடி வரும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. குருவின் பொன்னான பார்வையால் வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பொறுப்புடன் நடந்து கொள்வது. வேலை செய்யும் இடத்தில் நிதானம் அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் உங்களுக்கு தொட்டது துலங்கும். காரணம் குரு பகவானின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. குரு பகவான் ஏழாம் வீட்டிற்கு செல்லப்போவதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். குரு பகவான் பார்வையால் உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். புரமோசனும் கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சொந்த தொழில் தொடங்குவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லப்போவதால் குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். தற்போது வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். கவுரவப் பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றம், வேலையில் இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது.

கும்பம்: சனி பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சுக ஸ்தான குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. தொழில் ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் வியாபாரம் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்: ராசிநாதன் குருபகவான் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். திருமண தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குரு பகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உடலில் இருந்த நோய்கள் நீங்கும். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. கேட்ட இடத்தை விட கேட்காத இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். திடீர் வேலை மாற்றம் உங்களின் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+