குரு பெயர்ச்சி பலன் 2024: குரு வளையம்.. 12 ஆண்டுக்குப் பின் ரிஷபத்தில் அமரும் குரு.. யாருக்கு லக்?
சென்னை: குரு பெயர்ச்சி இன்னும் சில மாதங்களில் நிகழப்போகிறது. குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார் என்றாலும் சில படிப்பினைகளை தருவார். 2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் ராஜாதி ராஜயோகம் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு வளையம்: ஜோதிடத்தில் குரு வளையம் என்ற ஒரு விஷயம் கூறப்படுகிறது. அதாவது குரு வளையம் என்றால் ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், கும்பம்,தனுசு ஆகிய இந்த நான்கு ராசிகளில் ஏதாவது ஒன்றில் குரு இருந்தால் சிறப்பு. இந்த அமைப்பை தான் குரு வளையம் என்பார்கள். இந்த குரு வளையத்தில் குரு இருக்க பிறந்தவர்களுக்கு உயர்ந்த வாழ்க்கை அமையும் என்கிறது ஜோதிடம்.

குரு பெயர்ச்சி: 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகிறார். வியாழ வட்டம் ஏற்படப்போகிறது. குரு பயணம் செய்யும் இடம் மற்றும் பார்க்கும் இடத்தைப் பொறுத்து நன்மைகள் நடைபெறும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரம் ராசியையும் பார்க்கிறார். அதே போல இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களும், கடக ராசிக்காரர்களும் ராஜாதி ராஜ யோகம் கிடைக்கப்போகிறது.
மேஷம்: மேஷ ராசிக்கு இரண்டாம் வீடு வாக்கு ஸ்தானம், ஜென்ம குரு ராமர் வனத்தில் என்பார்கள். மேஷ ராசிக்காரர்களே.. 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார் குரு பகவான். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். பணம் பலவழிகளில் இருந்தும் வரப்போகிறது.
ராஜாதி ராஜயோகம்: நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். மனநிலை உடல்நிலையில் நல்ல மாறுதால் ஏற்படும். ராகு ராசியை விட்டு விலகிவிட்டார் குருவும் குடும்ப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். தன காரகன் தன ஸ்தானத்திற்கு வருவதால் பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். குருவித்துறையில் உள்ள சித்திரரத வல்லப பெருமாளை வணங்கி விட்டு குருபகவானை வணங்கலாம்.
கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார் குரு பகவான். 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவின் பயணத்தால் செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை நீங்கும். 2024ஆம் ஆண்டில் வியாபாரம் தொழிலில் செய்யும் முதலீடுகளுக்கு லாபமும் செழிப்பும் அதிகரிக்கும்.
லாபம் தரும் குரு: குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானம், குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். குருபகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். கடந்த கால சிக்கல்கள் நீங்கப்போகிறது. மேலும் நன்மைகள் நடக்க சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்கலாம். நன்மைகள் நடைபெறும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. அஷ்டம குருவினால் படாத பாடு பட்ட நீங்கள் இந்த ஆண்டு கஷ்டங்களில் இருந்து விடுபடப்போகிறீர்கள். 9ஆம் இடம் பாக்ய ஸ்தானம். நிறைய நன்மைகள் நடைபெறும். பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம். மிகப்பெரிய நல்ல யோகமான பலன்களை பெறப்போகிறது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. அதிர்ஷ்டகரமான காலகட்டம்.
சுபிட்சம் சந்தோஷம்: உங்கள் குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் ஏற்படும். வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு பணம் கொடுத்து உதவுங்கள். துவரம்பருப்பு தானம் கொடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள்.. குரு பகவான் 7ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். 7ஆம் இடம் களத்திர ஸ்தானம் நன்மையை கொடுக்கும் ஸ்தானம். திருமண பாக்கியம் கைகூடி வரும். நல்ல பலன்கள் தரும் நேரடி குரு பார்வை மிதுனத்திற்கு கிடைக்கிறது. திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருந்து குரு பகவான் நேரடியாக பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
நேர்மறை எண்ணங்கள்: குரு பகவான் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பார். கஷ்டங்கள், பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்கப் போகிறார். அமாவாசை நாட்களில் திருநங்கைகளுக்கு உதவி செய்யலாம். வயதானவர்களுக்கு தேவையான பொருட்களை வியாழக்கிழமைகளில் வாங்கிக்கொடுக்கலாம். கொண்டைக்கடலை தானம் தர நன்மைகள் அதிகரிக்கும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. ஏழரை சனியால் சிரமப்பட்டு வருகிறீர்கள். 2024ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகிறார். காரிய சித்தியாகும். இந்த ஆண்டு குரு நிறைய நன்மைகளை செய்யப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அமரப் போவதால் உங்கள் ராசிக்கு குருவின் அருள் பார்வை கிடைப்பதால் தொட்டது துலங்கும் புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும்.
குருபகவான் அருள்: வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப விசயங்கள் நடைபெறும். நினைத்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும். வேலையில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் தருவார் குரு பகவான். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யலாம் நன்மைகள் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications