நம்பர் சரியில்லையே.. இனி காங்கிரஸ் கதை அவ்வளவுதான்.. எண் கணித நிபுணர் கணிப்பு
சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்பது தொண்டர்கள் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியா? பிரியங்கா காந்தியா?என்ற விவாதமும் அவ்வப்போது எழுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைவரானால் கட்சி கரைந்து போகாமல் காப்பாற்ற முடியும் என்று கணித்து கூறியுள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.
136 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாட்டினை பலமுறை ஆண்ட காங்கிரஸ் கட்சி காலாவதியாகிறதா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய காங்கிரஸ் கட்சி. 1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. நாட்டின் முதல் பிரதமரானார் பண்டித ஜவகர்லால் நேரு.
ஒரு சில நேரங்களில் தவிர நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலான நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்திருக்கின்றனர். நேரு, இந்திரா, ராஜீவ்காந்தி என தொடர்ந்து நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரதமராகவும் இருந்திருக்கின்றனர். ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு நரசிம்ம ராவ் பிரதமரானார். கடந்த 2005, 2009ஆம் ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமரானார் மன்மோகன்சிங். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும். அந்த கட்சியின் தலைவராக ராகுல்காந்தியோ, பிரியங்கா காந்தியோ தேர்வு செய்யப்பட்டால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? என்றெல்லாம் பலரும் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். நமது ஒன் இந்தியாவிற்காக பிரத்யேகமாக கணித்து கூறியுள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ். செல்வன்.

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி உதயமான ஆண்டு 28 /12 / 1885. உமேஷ் சுந்தர் பானர்ஜி முதல் தலைவராக இருந்தார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி. தற்போது காங்கிரஸ் கட்சியின் வயது 136 கட்சி தோன்றிய நாளின் கூட்டுத்தொகை கூட்டுத்தொகை 35 மொத்தம் 8 வருகிறது. தேதி 28 அதன் கூட்டுத்தொகை 1 வருகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தனது கிளைகளை பரப்பி பரந்து விரிந்து உள்ளது.

ஆண்ட கட்சி
பல மாநிலங்களில் ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்போது சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சிக்கட்டிலில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தோன்றியது முதலே போராட்டம்தான். காரணம் தோன்றிய நாளில் கூட்டு எண் 8 வருகிறது. போராட்டமாக இருந்தாலும் பலமுறை ஆட்சியில் அமர்ந்துள்ளது. முதல் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

தலைவர்கள்
காங்கிரஸ் கட்சிக்கு 97 பேர் தலைவராக இருந்திருக்கின்றனர். கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பெயர் எண்ணின் கூட்டுத்தொகை 9 வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பெயர் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டுத்தொகை அதன் கூட்டுத் தொகை 3 வருகிறது. கட்சியின் தலைமை அலுவலகம் 24 அக்பர் சாலை, டெல்லி. காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் விலகி கட்சி தொடங்கியுள்ளனர்.

சோனியா காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நீடித்தால் பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் அவரால் கட்சி வேலைகளை சரிவர கவனிக்க இயலாமல் போகிறது எனவேதான் வேறு தலைவரை தேர்வு செய்ய விரும்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தலைமையில் கட்சி பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை வெற்றியும் பெறவில்லை. கட்சிக்குள் கலகக்குரல் ஒலித்த காரணத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. இதனால் சில ஆண்டுகளாகவே நிரந்தர தலைவர் இல்லாமல் தற்காலிக தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.

ராகுல்காந்தி
ராகுல்காந்தியே மீண்டும் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைய தலைவர்கள் விரும்புகின்றனர். அதே நேரத்தில் முதுபெரும் தலைவர்கள் ராகுல்காந்தி தலைவராக வருவதை விரும்பவில்லை. இவர் தலைவரானால் கட்சியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
ராகுல்காந்தி பிறந்த நாள் 19/06/1970 கூட்டுத் தொகை 6 வருகிறது. இந்த 6ஆம் எண்ணுக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டு எண் 3ஆம் எண்ணுக்கும் எப்போதும் சரிப்பட்டு வராது. அவரது தலைமையின் கீழ் கட்சி வளர்ச்சி அடைய வாய்ப்பு குறைவுதான். படு பாதாளத்திற்கு கட்சி சென்று விடும்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் ஓரளவிற்கு வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது. காரணம் பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் 12/1/1972 கூட்டுத் தொகை கங்கிரஸ் கட்சியின் கூட்டு எண் 3க்கு சாதகமாக உள்ளது. கட்சி கரைந்து போகாமல் இருக்கும். இளம் தலைவர்கள் அதிக அளவில் ஏற்றுக்கொள்வார்கள்.

கட்சி அலுவலகம்
காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் முதலில் 7, ஜந்தர்மந்தர் மார்க், டெல்லியில் செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் 24, அக்பர் ரோடு டெல்லிக்கு அலுவலகம் மாற்றப்பட்ட பின்னர் அதிக அளவில் கட்சி பிரச்சினைகளை சந்தித்து உள்ளது. கட்சியின் கூட்டு எண் 3, தலைமை அலுவலகம் செயல்படும் இடம் 6 எனவேதான் கட்சியின் வளர்ச்சியில் தடை உள்ளது. இதே அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நீடித்தால் வருங்கால சந்ததியினருக்கு நாட்டில் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்று இருந்தது என்று அடையாளம் காட்ட வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு கட்சி காணாமல் போய் விடும். காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் மன்மோகன் சிங் என்று ஆகிவிடும் சூழ்நிலை உருவாகி விடும்.

சோனியா கையில் முடிவு
ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே அதுவும் சரியில்லாத எண்ணில் அமைந்துள்ளது. இனி வரும் காலங்களில் கட்சியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சோனியாவின் கைகளில் உள்ளது. அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
தென்மாநிலங்கள் அதிகாரம் பறிபோகும்.. தொகுதி மறுவரையறை தான் மிகப்பெரிய ஆபத்து.. சோனியா காந்தி -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications