தனுசு வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், சனி - காதல் ராசிபலன் 12 ராசிகளுக்கும் எப்படி?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  2018-ல் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?

  சென்னை: காதல் நாயகன் சுக்கிரன் சூரியனோடு இணைந்து தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். அதே போல புத்திநாதன் புதன், ஆயுள்காரகன் சனியோடு இணைந்து தனுசு ராசியின் மூலம் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இந்த வாரம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் காதல் ரசாயனம் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்கலாம்.

  காதலர்களிடையே இந்த வாரம் சற்று நெருக்கம் அதிகமாகவே இருக்கும். சில ராசிக்காரர்கள் வாயை மூடி மவுனம் காப்பது தங்களின் துணை தக்க வைக்க உதவும்.

  வார இறுதியில் விருச்சிக ராசிக்கு வரும் சந்திரனால் கொஞ்சம் டென்சன் அதிகரிக்கும். கொஞ்சம் பொறுமை காத்தால் தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

  மேஷம்

  மேஷம்

  உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு ஏழாவது இடமான துலாம் ராசியில் குருபகவானுடன் இணைந்து அமர்ந்துள்ளர். ராசிக்கு 5ஆம் அதிபதியான சூரியன் 9வது இடமான தனுசு ராசியில் சனி, புதன், சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். உங்கள் காதல் வாழ்க்கையில் உற்சாகம் ஏற்படும். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரம். இடையிடையே சின்னச்சின்ன சங்கடங்கள், பிரச்சினைகள் வந்தாலும் புத்திநாதன் புதனால் சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று ஏற்ற நாள்.

  ரிஷபம்

  ரிஷபம்

  உங்கள் ராசி நாதன் சுக்கிரன் ராசிக்கு 8வது இடத்தில் சூரியன், புதன், சனியோடு இணைந்து யோக நாயகனாய அமர்ந்துள்ளார். உங்கள் துணையுடன் எமோசனலாக பேச வேண்டாம். காதலை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரையும் தூது போக சொல்ல வேண்டாம். நீங்களாகவே கிரியேட்டிவ் ஆக யோசித்து காதலை ரொமான்ஸ் ஆக கொண்டு செல்லுங்கள். காதல் மூடினை மாற்றும் வகையில் ஏற்பட உள்ள சில சம்பவங்களை ஈஸியாக எதிர்கொள்ள தயாராகுங்கள். உங்கள் அந்தரங்க அனுபவங்கள், ரகசியங்களை பகிர்ந்து கொள்ள இது ஏற்ற தருணமல்ல.

  மிதுனம்

  மிதுனம்

  மிதுன ராசிக்காரர்களே கவனம் தேவை காரணம் காதலின் இருண்ட பக்கத்தை இந்த வாரம் பார்க்க நேரிடலாம். உங்கள் ராசி நாதன் புதன் தனுசு ராசியில் சூரியன், சனி, சுக்கிரனுடன் இணைந்து அமர்ந்துள்ளார். 7வது இடத்தில் அமர்ந்துள்ளது அத்தனை சிறப்பானதல்ல. ராசிக்கு 5வது இடத்தில் குருவும், செவ்வாயும் அமர்ந்துள்ளனர். வாழ்க்கைத் துணை, காதல் துணையோடு வார்த்தை போர் நடத்த வேண்டாம். அப்படி செய்தால் காதல் முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மனம் நோகும்படியாக பேச வேண்டாம்.

  கடகம்

  கடகம்

  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து ரொமான்டிக் டிரிப் செல்ல வாய்ப்பு உள்ளது. காதல் கணக்கை இந்த வாரம் இனிதே தொடங்குங்கள். ராசி நாதன் சந்திரன் நகர்ந்து கொண்டே இருக்கிறார் இந்த வாரம் உங்கள் ராசிக்கு 3வது இடத்திலும் வார இறுதியில் விருச்சிக ராசியில் உங்களுக்கு 5வது இடத்திலும் அமர உள்ளார். உங்கள் ராசியில் ராகு அமர்ந்துள்ளார். உங்கள் துணையிடம் காதல் ரசாயனம் ஊற்றெடுக்கும். காதல் தீயை மூட்டும் நாயகன் செவ்வாய் நான்காவது இடத்தில் குருவோடு இணைந்து அமர்ந்துள்ளார்.

  சிம்மம்

  சிம்மம்

  காதலர் அல்லது காதலி என வாழ்க்கைத் துணையுடன் சின்னச் சின்ன சச்சரவுகள் வரலாம். கவனம் தேவை வாரத்தின் மத்தியில் தனியாக எங்காவது அழைத்துச்சென்று உங்கள் காதல் நேரத்தை உற்சாகமாக பொழுதை போக்குங்கள். உங்கள் ராசி நாதன் சூரியன் ராசிக்கு 5வது இடத்தில் சனி, புதன், சுக்கிரனோடு இணைந்துள்ளார். இந்த வாரம் சற்றே அமைதி காப்பது காதல் வண்டி பிரச்சினையில்லாமல் ஓட வழி ஏற்படும்.

  கன்னி

  கன்னி

  இந்த வாரம் புதிதாக காதல் கணை உங்கள் மீது பாயலாம். மன்மதன் அம்பை எதிர்கொள்ள தயாராக இருங்கள். ராசி நாதன் புதன் 4வது இடத்தில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்துள்ளார். கேது உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் அமர்ந்துள்ளார். உங்கள் காதல் மேலும் சிறக்க துணையோடு அமைதியாக பேசுங்கள். காதல் உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் வெளிப்படுத்துங்கள். ராசிக்கு இரண்டாம் இடத்தில் குருவோடு செவ்வாய் இணைந்துள்ளதும் கூடுதல் சிறப்பு.

  துலாம்

  துலாம்

  துலாம் ராசிக்காரர்களே... உங்கள் ராசி நாதன் சுக்கிரன் இந்த வாரம் சூரியன், சனி, புதனோடு இணைந்து தனுசு ராசியில் அமர்ந்துள்ளார். காதல் விவகாரங்களில் நிர்பந்தம் செய்ய வேண்டாம். சனிபகவான் உங்கள் காதல் உணர்வு சிறக்க சில நல்ல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பார். கோவில், குளங்கள், ஆன்மீன தலங்களுக்கு உங்கள் துணையோடு செல்ல வாய்ப்பு ஏற்படும். வார இறுதியான சனி, ஞாயிறு கிழமைகளில் காதலில் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

  விருச்சிகம்

  விருச்சிகம்

  உங்கள் காதலர் அல்லது காதலி வாழ்க்கைத் துணை உங்களைப் பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். காதல் சிந்தனை ஊற்றெடுக்கும். ரொமான்ஸ் மூடில் திளையுங்கள். ராசி நாயகன் செவ்வாய் 2 மற்றும் 5ஆம் அதிபதியான குருவோடு இணைந்து 12வது இடத்தில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். ஈகோவை விட்டு விட்டு காதல் துணையோடு எளிதாக நட்பு ரீதியாக பேசுங்கள். விட்டுக்கொடுங்கள் காதல் வாழ்வில் நறுமணம் ஊற்றெடுக்கும்.

  தனுசு

  தனுசு

  வாழ்க்கைத்துணையோடு பேசும் வார்த்தைகளில் தேன் கலந்து பேசுங்கள். இது காதல் வாழ்க்கையை மேம்படுத்த உதவும். உங்கள் காதல் வாழ்க்கையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லுங்கள். உங்கள் ராசிநாதன் குரு பகவான் ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானுடன் இணைந்துள்ளார். முன்கோபத்தை விடுங்க. வார மத்தியில் காதல் உற்சாகம் அதிகரிக்கும். வார இறுதியில் காதல் வாழ்க்கையைப் பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்படும். திருமணம் தொடர்பாக காதல் துணையின் பெற்றோருடன் பேசலாம். துணையோடு வார இறுதியில் டேட்டிங் செல்ல வாய்ப்பு கை கூடி வரும்.

  மகரம்

  மகரம்

  கனவுகள் நனவாகும் காலம் இது. காதல் நினைவுகளில் உற்சாகம் ஊற்றெடுக்கும். புதன்கிழமையன்று காதலை உற்சாகமாக வெளிப்படுத்தலாம். காதல் பேரின்பத்தில் திளைக்கலாம். உங்கள் ராசியில் கேது அமர்ந்துள்ளார். ராசி நாதன் சனிபகவான் புதன், சூரியன், சனியோடு இணைந்து 12 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். காதலுக்காக கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த வாரம் காதலின் நறுமணத்தை உற்சாகமாக நுகர்வீர்கள்.

  கும்பம்

  கும்பம்

  கும்ப ராசிக்காரர்களே... காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. வாழ்க்கை துணை பற்றி பிறர் கூறும் கட்டுக்கதைகளை கவனமாக இருக்கவும். எதையும் உடனே நம்ப வேண்டாம். உங்கள் காதல் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசுவதை தவிருங்கள். உங்கள் ராசிநாதன் சனி 11வது இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அவரோடு உங்கள் ராசிக்கு 5ஆம் 8ஆம் அதிபதி புதன் 11வது இடத்திலும் அமர்ந்துள்ளனர். சனி உச்ச வீட்டில் குருவும், குருவின் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்துள்ளனர். புடிச்ச முயலுக்கு 3 கால் என்று பிடிவாதமாக நிற்க வேண்டாம். துணையோடு வளைந்து கொடுத்து பேசி பழங்குங்கள். அப்புறம் நீங்க இழுத்த இழுப்புக்கு வருவார் உங்கள் துணை. இந்த வார இறுதியில் துணையோடு இணைந்து இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

  மீனம்

  மீனம்

  மன அழுத்தமாக உணர்கிறீர்களா வாழ்க்கைத்துணையோடு மனம் விட்டு பேசுங்கள். அது உங்களின் அழுத்தத்தை குறைக்க உதவும். காதல் வாழ்க்கையில் அற்புதமான வாரம் இது. அலுவலகத்திலே வீட்டிலே உங்களுக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த வாரம் முழுக்க காதலில் திளைக்கலாம். ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ள செவ்வாயும், ராசிநாதன் குருவும் இணைந்து காதல் உணர்வுகளுக்கு தூபம் போடுவார்கள். காதல் ஒரு பக்கம் ஜாலியாக இருந்தாலும் பணியிலும் சற்றே கவனம் தேவை. புத்தி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 10வது இடத்தில் சனி, சூரியன், சுக்கிரனோடு இணைந்து அமர்ந்துள்ளதால் பேச்சில் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sun and Venus being in Pooradam stars, blissful relationship this week is quite tough. Those who are married, might face conflicts on petty issues. You might be misunderstood quite often by your mate and if you take the golden rule of silence, then you will be blamed for uninterested and indifferent attitude in relationship.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற