Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பரிகாரத்தலம் காளஹஸ்தி சிவ ஆலயம்.. மகாசிவராத்திரி விழா கோலாகல கொடியேற்றம்

சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாளஹஸ்தி: மகாசிவராத்திரி விழா காளஹஸ்தி கண்ணப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் இன்று தொடங்கி அடுத்த மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை 14 நாட்கள் மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது.

அமிர்தத்துக்காக பாற்கடல் தேவர்கள் மற்றும் அசுரர்களால் கடையப்பட்டபோது, 'ஆலகாலம்' என்ற வி‌ஷம் உருவானது. ஆனால், அதை ஏற்க யாரும் முன்வராத சமயத்தில் மற்றவர்களின் வேண்டுதலின் பேரில் சிவபெருமான் ஆலகால வி‌ஷத்தை குடித்தார். அதனை தன்னுடைய கழுத்தில் வைத்துக் கொண்டார். அந்த வி‌ஷத்தின் தீவிரத்தால் சிவன் ஆழ்ந்த தூக்கத்துக்குள்ளானார். ஆனால், தூங்கினால் வி‌ஷத்தின் பிரபாவம் அதிகமாகும் என்று யோசித்த தேவர்கள், அசுரர்கள், கந்தவர்கள், முனிவர்கள் இரவில் கண் விழித்து உற்சவங்கள் நடத்தினர். அதையே மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா உற்சவம் களைகட்ட துவங்கியுள்ளது. மாட வீதிகளில் வீதி உலா நடத்த அறநிலையத் துறை அனுமதி, அளித்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காளஹஸ்தி தல வரலாறு

காளஹஸ்தி தல வரலாறு


முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: "வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்". போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுஸ்தலம்

வாயுஸ்தலம்

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

சுயமூர்த்தி காளத்திநாதர்

சுயமூர்த்தி காளத்திநாதர்

இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் - உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.

பக்த கண்ணப்பர்

பக்த கண்ணப்பர்

கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

கோவிலை வலம் வருவது எப்படி

கோவிலை வலம் வருவது எப்படி

இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.

ராகு கேது சர்ப்பதோஷம் நீங்கும்

ராகு கேது சர்ப்பதோஷம் நீங்கும்

ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

காளஹஸ்தி மகாசிவராத்திரி

காளஹஸ்தி மகாசிவராத்திரி

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் உற்சவத்துக்குத் ஆண்டுதோறும், தனிச் சிறப்பு உண்டு. அங்கு, நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. சிவபெருமானின் துயில் எழுப்ப, தேவர்கள் நடத்தும் நிகழ்ச்சியை தேவராத்திரி என அழைக்கின்றனர்.

கொடியேற்றம்

கொடியேற்றம்

இந்த ஆண்டு வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா காளஹஸ்தியில் உள்ள கைலாசகிரி மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவிலில் பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து உற்சவர் பக்தகண்ணப்பர் சிறப்பு அலங்காரத்தில் கைலாசகிரி மலைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க பிரதான அர்ச்சகர்கள் கொடியேற்றினர். அதன் பிறகு நைவேத்தியம், தீபாராதனை நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+