மார்ச் மாத ராசி பலன் 2024: கோடி கோடியாக தேடி வரப்போகும் செல்வம்.. அதிரடி லக் யாருக்கு?
சென்னை: மார்ச் மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்கப்போகிறது. மகத்துவம் நிறைந்த மாதம். மாசியும் பங்குனியும் இணைந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் கும்ப ராசியிலும் மீன ராசியிலும் பயணம் செய்வார். நவ கிரகங்கள் பயணத்தினால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது. நினைத்த காரியம் நிறைவேறுமா? வேலை மாற்றம் எதுவும் ஏற்படுமா என்று பார்க்கலாம்.
மார்ச் மாதத்தில் மேஷ ராசி மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள். பத்தாம் வீட்டில் உச்சம் பெற்ற செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்துள்ளார். லாப வீட்டில் சூரியன், ஆட்சி பெற்ற சனி உடன் , புதன் இணைந்துள்ளனர். சந்திரனின் பயணமும் சாதகமாகவே உள்ளது.

அற்புதமான மாதம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலால் எதையும் சாதிப்பீர்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் தைரியமாக பணத்தை முதலீடு செய்வீர்கள். இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு அற்புதமான மாதம் பதவி அதிகாரம் கிடைக்கும். வளர்ச்சிகரமான மாதம். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். செவ்வாய் சுக்கிரன் கூட்டணியால் உங்களுக்கு ராஜயோகம் உண்டாகும். குருபகவான் பார்வையும் சாதகமாக உள்ளதால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். காதல் கிரகங்களின் கூட்டணியால் திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும்.
செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் புதன் மீன ராசியில் நீச்சமடைவார். ராகு உடன் கூட்டணி சேர்ந்து புதன் புதுவித யோகத்தை கொடுக்கப்போகிறார். புதன் கல்விக்காரகன். மாணவர்களுக்கு அற்புதமான கால கட்டமாக இருக்கிறது. மேஷ ராசி லக்னத்தில் பிறந்தவர்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள்.
அரசு போட்டித்தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்களுக்கு நல்ல கால கட்டம். உங்களுக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் பயணம் செய்கின்றன. வெற்றிகள் தேடி வரப்போகிறது. இல்லத்தரசிகளுக்கு பொன் பொருள் சேரும். நீங்கள் நினைத்தது நடைபெறும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பேச்சுக்கு பலம் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் இருந்து வந்து உங்களை திக்கு முக்காட வைக்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications