நயன்தாரா விக்னேஷ் சிவனின் "உயிரும் உலகமும்"..மகிழ்ச்சியை தருவார்கள்..ஜோதிடர் நம்பிக்கை
சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியரின் பிள்ளைகள் உயிரும் உலகமும் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய திசையை வழங்குவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
நட்சத்திர காதல் ஜோடி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்-தந்தை ஆகியுள்ளனர். நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அக்டோபர் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளின் கால்களை முத்தமிடும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

உயிர் உலகம்
நானும் நயனும் தந்தை, தாய் ஆகிவிட்டோம். கடவுளின் ஆசிர்வாதத்தால் எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. எங்களது உயிர், உலகம் எனத் தெரிவித்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்து கூறினர். பலர் பாதகமான கருத்துக்களையும் பதிவிட்டனர். இந்தக் குழந்தைகளுக்கு உயிர், உலகம் எனப் பெயரிட்டுள்ளனர்.

மகிழ்ச்சியை தரும் குழந்தைகள்
குழந்தைகளின் பெயர்களின் அடிப்படையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் வாழ்க்கையில் உயிர் மற்றும் உலகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார். இந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைக் கொண்டு வந்து அவர்களுக்கு புதிய திசையை வழங்குவார்கள் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

உயிர் பெயர் காரணம்
இதில் உயிர் என்றால் மிகவும் கவர்ச்சிகரமானவர், உலகை தன்வசப்படுத்தக் கூடியவர், இனிமையான மற்றும் ஆடம்பரமான முறையில் வாழ்பவர். தங்களிடம் உள்ளவற்றை அழகாக்குபவர் என பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், கூறியுள்ளார்.

உலகம் பெயர் காரணம்
அதே போல் உலகம் என்றால் சுறுசுறுப்பானவர், ஆற்றல் மிக்கவர், தைரியமானவர் மற்றும் ஆர்வமுள்ளவர் என்றார்.
மேலும், "எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து முன்னேறுவார்கள் என்று ஜோதிடர் கூறியுள்ளார்.

தனித்துவமான பெயர்கள்
நட்சத்திர தம்பதியர் விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த பல ஆண்டுகாலமாக காதலித்து வந்தனர். பல ஊர்களுக்கு ஒன்றாகவே சென்று வந்தனர். திருமணத்திற்கு முன்பே திரைப்பட விழாக்களிலும் இணைந்தே வருவார்கள். எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

4 மாதத்தில் பெற்றோர்
திருமணம் முடிந்து 4 மாதம் மட்டுமே ஆன நிலையில் பெற்றோர் ஆகி விட்டதாக விக்னேஷ் சிவன் அறிவிக்கவே அது பலருக்கும் கேள்வியை எழுப்பியது. பின்னர் அது வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தை என தெரியவந்தது. இது குறித்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விளக்கமான எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.

நட்சத்திர தம்பதியினர்
பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஷாரூக் கான் - கவுரி கான் ஜோடி, நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா, பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சன்னி லியோன் - டேனியல் வெபர் என ஏராளமானோர் இப்படி வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் முதல்முறையாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications