Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெய்வீக திருமணங்கள் நடக்கும் பங்குனி மாதம்.. பங்குனி உத்திரம்.. விஜயா ஏகாதசி.. என்னென்ன விசேஷம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பங்குனி மாதத்தில் சூரியன் மீன ராசியில் பயணம் செய்வதால் மீன மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தான் இலைகளை உதிர்த்த தாவரங்கள் துளிர்க்க ஆரம்பித்து பசுமையாக மாறுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது. சிவபெருமான் பார்வதியை கைத்தலம் பற்றிய மாதம் என்ற சிறப்பை பெறுகிறது பங்குனி. தெய்வீக திருமணங்கள் நடைபெறும் இந்த மாதத்தில் பல திருவிழாக்கள் நடைபெற உள்ளன, அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கின்ற சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில் தான் நடந்திருக்கின்றன என்று ஆன்மீக ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இந்த மாதத்தில் அன்னதானம், வஸ்திரதானம் மட்டுமல்லாமல் சின்ன சின்ன தானங்கள் செய்தால் கூட ஆயிரம் பசுக்களை தானம் செய்ததற்கு ஈடாகும் என்று ஞானிகள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.

Panguni 2024 Important Viratham days and festival days Tamil Month of Panguni

பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திர காலத்தில் விரதமிருந்து முருகப்பெருமானை மனம் உருக வேண்டினால் திருமணம் நடைபெறாமல் ஏக்கத்தோடு இருக்கின்ற அனைவருக்கும் அந்தப் பாக்கியம் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம். மேலும் பொருளாதார முன்னேற்றம் அபாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ராவணன் சீதையை சிறை எடுத்து சென்று விட்டார். எப்படி மீட்டு வருவது என்று ராமர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அப்பொழுது அங்கே வந்த ஒரு முனிவர் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறார். அதன்படி விரதம் இருந்து தான் சீதையை ராமர் மீட்டு வந்தார் என்று ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் சிவன்- பார்வதி, முருகன்-தெய்வயானை, ராமர்- சீதை, ஆண்டாள்- ரங்க மன்னார் போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அர்ஜூனன் மகாலட்சுமி ஆகியோர் இந்த நாளில் தான் அவதரித்திருக்கிறார்கள். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் கல்யாண விரதம் என்று அழைக்கப்படுகிறது.

காரடையான் நோன்பு இந்த மாதத்தில்தான் முதல் நாளில் கடைபிடிக்கப்படுகிறது. கார்காலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்து உரலில் குத்தி அரிசியாக்கி பொங்கல் வைத்து பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள்.

சாவித்திரி எமனிடமிருந்து தன்னுடைய கணவரான சத்தியவானின் உயிரை மீட்பதற்காக விரதம் மேற்கொண்டார். சத்தியவானின் உயிரை எமன் எடுத்துக் கொண்டு செல்கிறார். எமனை வழிமறித்து விவாதம் செய்து சத்யவானின் உயிரை மீட்டு வருகிறார் சாவித்திரி. அந்த நேரத்தில் சாவித்திரி மேற்கொண்ட விரதம் தான் காரடையான் நோன்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்த நோன்பு மாசி மாத இறுதி நாள் அன்று தொடங்கி பங்குனி முதல் நாள் நிறைவு பெறுகிறது. இந்த வழிபாட்டில் வைக்கப்படும் நோன்பு கயிறு விரதம் முடிந்த பிறகு பெண்களால் அணியப்படுவது சிறப்பம்சம். இந்த விரதம் கணவனின் ஆயுள் நீடிப்பதற்காகவும் ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரத்தை அம்மன் வழங்குவதாக பெண்கள் ஆராதிக்கின்றனர்.

இந்த மாதத்தில் பெண்கள் கௌரி விரதம் மேற்கொண்டால் கணவரின் அவமிருத்த யோகத்தை முறியடிக்கலாம். இந்த விரதம் மாசி மாத கடைசி நாள் தொடங்கி பங்குனி மாத முதல் நாளில் நிறைவு பெறுகிறது. கணவனின் ஆயுள் விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும் இந்த விரதம் உறுதுணையாக இருக்கிறது.

பங்குனி மாதத்தில் வரக்கூடிய பண்டிகை நாட்கள் என்னென்ன எந்த நாட்களில் கொண்டாடப்பட உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பங்குனி 1 மார்ச் 14 காரடையான் நோன்பு. ஷடாசீதி புண்ணிய காலம்.

பங்குனி 12 மார்ச் 25 பங்குனி உத்திரம்

பங்குனி 4 வைஷ்ணவ ஏகாதசி

பங்குனி 20 பதஞ்சலி சித்தர் ஜெயந்தி

பங்குனி 23 விஜயா ஏகாதசி

பங்குனி 25 சனிப்பிரதோஷம்

பங்குனி 26 சர்வ அமாவாசை

பங்குனி 27 உகாதிப் பண்டிகை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+