பொங்கல் நாளில் செய்யும் தானம்.. இந்த ராசிக்காரர்களை கோடீஸ்வரர்களாக மாற்றுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். மகிழ்ச்சியான தருணங்களில் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் தானம் கொடுக்கலாம். நாம் கொடுக்கும் தானத்தை பெற்றுக்கொண்டவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று நம்மை வாழ்த்துவார்கள். தானமும் தர்மமும் செய்வதன் மூலம் நம்முடைய செல்வ வளம் பெருகும் என்பதில் நம்பிக்கை உள்ளது. பொங்கல் பண்டிகை நாளில் இருந்து சூரிய பகவானின் வடதிசை பயணம் ஆரம்பமாகிறது. மகர ராசியில் சூரியன் பயணம் செய்யும் போது கூடவே சுக்கிரனும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் இடமாற்றம் கூட்டணி ஆகியவைகளைப் பொறுத்து எந்த ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமி யோகம் வரும், யாரெல்லாம் என்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் இணைந்துள்ளதால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவியில் உயர்வு, புரமோசன் கூடிய சம்பள உயர்வு தேடி வரும். தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து மாலை நேரத்தில் பசுவுக்குக் கொடுத்து வர கடன் பிரச்சினைகள் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.

Pray to the Lord Sun on Pongal day for his blessings to get rid of your debt problems

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..சுக்கிரனின் அருள் உங்களுக்கு தை மாதம் முதல் பரிபூரணமாக கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடி உள்ளதால் நீங்கள் ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சினைகள் நீங்கி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஜவ்வரிசி கொண்டு இனிப்பு பலகாரம் செய்து அதை பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர பொருளாதார வளம் அதிகரிக்கும்.

Pray to the Lord Sun on Pongal day for his blessings to get rid of your debt problems

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் சேர்ந்துள்ளன. நினைத்த காரியம் கைகூடி வரும் என்றாலும் செய்யும் செயல்களில்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும். சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க குளிக்கும் போது கொஞ்சம் தயிர் சேர்த்துக் கொள்ளவும். தை பொங்கல் நாள் முதல் தினசரி சூரிய தரிசனம் செய்து வணங்கவும் ஏழைகளுக்கு ஞாயிறுக்கிழமைகளில் தயிர் சாதம் தானமாக கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

Pray to the Lord Sun on Pongal day for his blessings to get rid of your debt problems

கடகம்

சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த தை திருநாள் முதல் எதிர்பாராத மாற்றங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், சனி, சுக்கிரன் இணைந்திருப்பதால் திடீர் மாற்றங்கள் ஏற்படும். மூன்று கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை வாங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுத்து வர நன்மைகள் கொடுக்கும்.

Pray to the Lord Sun on Pongal day for his blessings to get rid of your debt problems

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். தீராத பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போகிறார் சூரிய பகவான். உங்கள் ராசி அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்தாலும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும். அச்சுவெல்லம் எள் சேர்த்து செய்த இனிப்புகளை செய்து ஏழைகளுக்கு தானமாக கொடுக்க நன்மைகள் நடைபெறும்.

Pray to the Lord Sun on Pongal day for his blessings to get rid of your debt problems

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையடைந்துள்ளது. எத்தனையோ சிக்கல்களை கடந்து வந்திருப்பீர்கள். மன குழப்பம் நீங்கும் உங்கள் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்க தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாக சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு உளுந்து வடை தானம் செய்யவும். துளசிக்கு தினசரி தண்ணீர் ஊற்றி அகல் விளக்கு ஏற்றி வழிபட கடன், நோய் பிரச்சினை நீங்கும்.

Pray to the Lord Sun on Pongal day for his blessings to get rid of your debt problems
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+