• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி நெல்லிப்பொடி அபிஷேகம் - திருவோணம் தைலாபிஷேகம்

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு நாளை தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப் பொடியுடன் 108 மூலிகை தீர்த்த அபிஷேகமும் சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது. புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு 21.09.2018 வெள்ளிக்கிழமை திருவோண ஹோமத்துடன் விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும், இயற்கை வளம் பெறும், தெய்வீக அருள் கூடும். புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி (20.09.2018) என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரத நாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏகாதசி திதியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் நெல்லிப் பொடி மற்றும் 108 மூலிகை தீர்த்த அபிஷேகத்திலும் யாகத்திலும் பங்கேற்று உடல் ரீதியாக ஏற்படும் நோய்களில் இருந்தும், மனரீதியாக ஏற்படும் நோய்களிலிருந்தும் நிவாரணம்

Purattasi EKadesi and Tiruvonam abishekam at Sri dhanvantri peedam

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. திருவோண விரதம் என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் விரதம் இருப்பதாகும். இந்த விரதம் பெருமாளுக்கு உகந்தது. அதனால் தான் பெருமாளுக்கு திருவோண பெருமாள் என்ற பெயரும் உண்டு. மேலும் "திரு" எனும் மஹாலக்ஷ்மியுடன் இருப்பதால், திருமகள் அருளும் இந்நாளில் கிடைக்கிறது. அதனால் தான் திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள்.

காக்கும் கடவுள், திருவேங்கடவன், திருமால், மலையப்ப சாமி, என்ற பெயர்களில் அழைத்து மகிழ்கின்ற பெருமாளின் அம்சமான ஸ்ரீ தன்வந்திரி பகவான் அருள் பெற்று, மக்கள் நோயின்றி நலமுடன் வாழவும் பலவகையான தோஷங்களில் ஒன்றான சந்திர தோஷம் நீங்கவும், இத் தோஷத்தினால் ஏற்படும் பலவகையான நோய்கள் நீங்கவும், மகிழ்ச்சியான வாழ்வு மலரவும், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படவும், மனக்குறைகள் அகலவும், பெண்கள் விரும்பியதை அடையவும், திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையவும், நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகவும், நீங்காத செல்வம் நிலைத்து நிற்கவும் வருகிற 21.09.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பிணி தீர்க்கும் பெருமாளான தன்வந்திரிக்கும், வினை தீர்க்கும் விநாயகருக்கும் தைலாபிஷேகத்துடன் திருவோண ஹோமமும் நடைபெறுகிறது.

Purattasi EKadesi and Tiruvonam abishekam at Sri dhanvantri peedam

எல்லா மாதங்களிலும் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்திருந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணத்தில் தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்வது ஆரோக்யத்திற்கும், ஐஸ்வர்யத்திற்கும் மிகவும் சிறப்பாகும்.

திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் புரட்டாசி மாதத் திருவோணம். அதேபோல் சனிபகவான் அவதரித்த தினமும். புரட்டாசி சனிக் கிழமை தான். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் திருவோண ஹோமத்தில் கலந்து கொண்டு சனி கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி ஆயுள் விருத்தி பெற்று, கல்வித் தடை, திருமணத் தடை, ஆரோக்யத் தடைகள் நீங்கி, ஐஸ்வர்ய வாழ்வு பெறலாம்.

Purattasi EKadesi and Tiruvonam abishekam at Sri dhanvantri peedam

இந்த ஹோமத்தின் நிறைவாக மூட்டுவலி, சக்கரை வியாதி, இருதய நோய், மலச்சிக்கல், வயிறு உபாதைகள், கண் நோய், குடல் சூடு, சொறி சிரங்கு, போன்ற நோய்கள் அகலவும், கர்ம வினைகள் நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த தைலத்தை வருகை புரிகின்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் இலவசமாக வழங்கி அருளாசி அளிக்க உள்ளார்.

Purattasi EKadesi and Tiruvonam abishekam at Sri dhanvantri peedam

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்கலாம். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை .

தொலைபேசி: 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Thiruvonam star, individuals can undertake a special abhishekam. They use gingelly oil to anoint the idol and that is given back as a massaging agent. Sri Muralidhara Swamigal has denoted the Thiruvonam star in the Tamil month of Puratasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X