ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தேடி வரும் ராஜயோகம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்
சென்னை: பாம்பு கிரகங்களான ராகுவும் கேதுவும் மீன ராசிக்கும் கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்து விட்டன. 18 மாதங்கள் இந்த கிரகங்கள் பல ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன. நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். நிழல் கிரகங்கள் மாயகிரங்கள் வலிமையான கிரகங்கள். ராகுவும் கேதுவும் நல்ல இடத்திற்கு மாறியுள்ளனர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. யோசிக்கவே வேண்டாம் தலைமேல் அமர்ந்திருந்த ராகு விலகி விட்டார். இனி நினைத்த காரியம் நிறைவேறும். கெட்டதெல்லாம் விலகப்போகிறது. இனி நல்லது மட்டுமே நடக்கப்போகிறது. நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் விலகும். பண வருமானம் அதிகரிக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். ஒன்றரை ஆண்டுகளில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். சித்திரைக்குப் பிறகு நல்லதே நடக்கும். முகத்தில் பொலிவு கூடும். வெற்றியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உங்களுக்கு ராஜயோகம் ஆரம்பித்து விட்டது. உளுந்து தானம் கொடுக்கலாம். பத்ரகாளி அம்மனை வழிபடுங்கள்.

ரிஷபம்: லாப ராகு அள்ளித்தரப்போகிறார். பூர்வ புண்ணிய கேது பிள்ளைகள் வாழ்க்கையில் நல்ல விசயங்கள் நடைபெறும். தொட்டது துலங்கும். பங்கு சந்தையில் பல மடங்கு லாபம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டின் மீது விழப்போவதால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சமயபுரம் மாரியம்மனை வழிபடுங்கள்.
மிதுனம்: பொற்காலம் ஆரம்பிக்கப்போகிறது. ராகு பகவான் தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கப்போகிறது. சொந்த தொழில் தொடங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. கடந்த கால கஷ்டங்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கப்போகிறது. பேரும் புகழும் தேடி வரப்போகிறது. சொந்த பந்தங்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் உதவிகள் தேடி வரும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஸ்ரீகாளஹஸ்தி சென்று ஸ்ரீ ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரை வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டம சனியில் நொந்து போய் அமர்ந்திருக்கிறீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றப்போகிறது. ராகு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் செல்வ வளம் பெருகும். சேமிப்பு கைகூடி வரும். தொட்டது துலங்கப்போகிறது. மிகப்பெரிய ராஜயோகத்தை தரப்போகிறது. முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வதால் பதவி அதிகாரம் தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கப்போகிறது. தடைகள் உடையப்போகிறது. முதலீடு செய்த பணம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. பண விவகாரங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. ஏப்ரல் மாதத்தில் குரு பெயர்ச்சி லாபத்தை தரப்போகிறது. அஷ்டம சனியினால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கப்போகிறது. ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு ராஜயோகத்தை தரப்போகிறது. பவுர்ணமி நாட்களில் குல தெய்வத்தை வழிபடுங்கள் குறைகள் நீங்கும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications