ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11ஆம் தேதி ஜூலை 27ம் தேதி ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஆவணி மாதம் 01ம் தேதி ஆகஸ்ட் 17ம் தேதி இரவு 18ம் தேதி இரவு 02-32க்கு ராகு பகவான் சிம்மம் ராசியிலிருந்து கடகம் ராசிக்கும் கேது பகவான் கும்பம் ராசியிலிருந்து மகரம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். சிம்மம் முதல் விருச்சிகம் வரை ராகு கேது பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.

சிம்மம்:

சிம்மம்:

சிம்மம் ராசி நண்பர்களுக்கு ராகு பகவான் 12 ஆம் வீடான செலவுகள் அயன சயன சுகபோகம் விரயம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு மாறுகிறார். ஜென்ம ராசியில் ராகு ராகுவிற்கு சனிபார்வை பாம்பின் வாயில் அகப்பட்ட தேரைபோல வாழ்க்கையில் பலவித சோதனை வேதனைகள் கடன் நோய் தேவையில்லாத அவமானம் ஆகியவற்றை அனுபவித்த தாங்களுக்கு இனி சற்றே ஆறுதல் கிடைக்கும் சனி பெயர்ச்சிக்குப் பின் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடலாம். இது வரை இருந்த வீண் விரயங்களை சுபவிரயமாக மாற்றுவார் ராகு பகவான் நீண்டா நாட்களாக வர வேண்டிய பாக்கிகள் வரும் கொடுக்க வேண்டியதை கொடுக்கலாம்.தொழில் உத்தியோகத்தில் சற்றே முன்னேற்றத்தை தரும். குடும்ப சூழ்நிலை மனநிறைவை தரும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஓன்று கூடுவார்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடன் வாங்க நேரிடலாம். ராசிக்கு 2ல் குரு கல்யாணம் நடக்கும் வரன் தேடியவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

கேதுபகவான் ராசிக்கு 7ம் இடத்திலிருந்து 6 ஆம் இடத்திற்கு மாறுகிறார் எதிரி கடன்கள் நோய்கள் துன்பம் பயம் நோய்கள் காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு மாறுவதால் மேலே சொல்லபட்ட எல்லா துன்பங்களையும் நீக்குவார். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் சிலருக்கு கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாகும் கேது நன்மைகள் அள்ளி வழங்குவார்.

கன்னி:

கன்னி:

கன்னிராசி நண்பர்களே தங்கள் ராசிக்கு இது வரை 12 ஆம் இடத்தில் ராகுவும் 6 ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சரித்தனர் செலவுகளால் பாடாய் படுத்திய ராகு லாபஸ்தானமான மூத்த சகோதரம் செல்வ லாபம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு ராகு வருகிறார். பொருளாதார வகையில் பலவித மாற்றங்களை சந்திக்கலாம். படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு படித்த படிப்புக்கு உண்டான வேலை அமையும். தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அரசாங்க ஊழியர்களுக்கு தாங்கள் விரும்பிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். வாங்கிய கடனுக்காக வீடு மனை விற்க நினைத்து அதற்கு சரியான விலை கிடைக்காமல் தவித்தவர்களுக்கு நல்ல விலைக்கு விற்று பணமாக்கி எல்லா கடன்களும் அடைபடும் சிலருக்கு வெளிநாட்டு தொழில் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் திருமணம் சுபகாரியம் குழந்தை பாக்கியம் திருக்கோயில் தரிசனம் கிடைக்கும் புதுமுயற்சிகள் கைகூடும்.

கேது பகவான் பூர்வபுண்ணியம் கற்பனை வளம் புதியதை உருவாக்கும் திறன் மனம் புத்தி சிந்தனை ஆகிய காரகங்களை குறிப்பிடும் 5 ஆம் பாவத்திற்கு கேது வருகிறார் இதுவரை கணவன் மனைவி இடையே இருந்த மன வேற்றுமை நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். பணம் பல வழிகளில் வரும் தகப்பனார் வழியில் சொத்துபத்துகள் கிடைக்கும். சொந்த வீடுகட்டி புது வீட்டுக்கு குடிபோகலாம்

 துலாம்:

துலாம்:

இது வரை தங்கள் ராசிக்கு 11ம் இடமான லாபஸ்தானத்தில் இருந்த ராகு ஜீவனம் செய்தொழில் வியாபரம் அந்தஸ்து அதிகாரம் புகழ் ஆகியவற்றை குறிப்பிடும் ஜீவன ஸ்தானத்திற்க்கு வருகிறார். ஏற்கனவே ராகு இருந்த இடம் நல்ல இடம்தான் பகை வீட்டில் அமர்ந்தால் நன்மையை குறைவாக செய்த ராகு பத்தாம் இடம் வருவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை தருவார். புதிய முயற்சிகள் கைகூடும் வேலை வாய்ப்பு மாற்றம் புது வேலை நல்ல வருமானம் கிடைக்கும். உத்தியோக முன்னேற்றத்தை தரும் துணிந்து செயல்படுவிர்கள் துன்பம் எப்பொழுதும் நிரந்தரம் இல்லை. கஷ்டநஷ்ட நிலைமாறும் சொந்த வீடு வாகனம் போன்றவை அமையும் குடும்பத்தில் அமைதி நிலவும் சுபகாரியம் நடக்கும் ஜென்மத்தில் குருவருவதால் எதையும் ஓருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள் அகல கால் வைத்தால் வில்லங்கத்தில் மாட்டி கொள்வீர்கள். கடகத்தில் சந்திரன் இருந்து அந்த ஸ்தானத்தில் ராகு வருவதால் தாய் வழியில் பிரச்சனைகள் வரக்கூடும். பிறப்பு ஜாதக தசா புத்தி பாதகமாக இருந்தால் நெருங்கிய உறவினர்கள் இறப்பதால் கருமம் செய்ய நேரிடும். வாங்கிய கடன்கள் அடைபடும் வட்டி சுமை குறையும்.
கேது பகவான் 4 ஆம் பாவ காரகமான கல்வி வியாபாரம் தாய் நிலம் வீடு வாகன வசதி சொத்து சுகம் ஆகியவற்றை கொடுக்கும் ஸ்தானத்திற்கு கேது வருகிறார். படித்து வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். நிலம் வீடு தொடர்பான வில்லங்கம் நீங்கும். புதிதாக வீடு நிலம் வண்டி வாகனம் வாங்கலாம் பழைய வீட்டை மாற்றலாம். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும் வெளிநாட்டு வேலை கிடைக்கும். தாய் வழி உறவினர்களால் பிரச்சனைகள் வரலாம் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களுக்கு ராகுபகவான் 9 ஆம் இடமான. தந்தை குரு தெய்வம் வெளிநாட்டு பயணம் புனிதயாத்திரை அதிர்ஷ்டம் ஆகிய காரகங்களை குறிப்பிடும் ஸ்தானத்திற்கு மாறுகிறார். புதிய முயற்சிகள் கை கூடும். தொழில் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வாங்கிய கடன்கள் அடைபடும் இழந்ததை மீட்டு விடலாம். சிலருக்கு பிள்ளைகள் முலம் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய பதவிகள் தேடிவரும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை நடைபெறும். சண்டை சச்சரவுகள் சாதகமாகும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் நீங்கும். பாகப் பிரிவினை உண்டாகும். வேலை தேடுவோர்களுக்கு நல்ல வேலை அமையும். வெளிநாட்டு தொழில் முயற்சிகள் கைகூடும்.

கேதுபகவான் தைரியம் சகோதரம் வீரம் போகம் துணிவு துணைவர் பலம் வெற்றி ஆகிய காரக ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீண்ட நாள் நோய்களால் உண்டான தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு திருமணம் சுபகாரியம் கை கூடும். எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி கிடைக்கும். .ஏழரை சனியால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் குறையும். பணம் முதலீடு போடாத தொழில்கள் கமிஷன் தரகு ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களால் வருமானம் அதிகரிக்கும் .மொத்தத்தில் சோதனைகள் எல்லாம் விலகிவிடும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Every 18 months, the karmic planets Rahu moves from Leo to Cancer and Ketu moves from Aquarius to Capricorn. In 2017, Rahu enters Cancer and Ketu enters Capricorn on
Please Wait while comments are loading...