ஆனி மாத ராசி பலன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-ஜோதிட பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

சென்னை: சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி.

தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். நம் நாட்டில் நீண்ட பகல் பொழுதினைக் கொண்ட மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது என்ற கருத்தும் வழக்கில் உள்ளது.

ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறும். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம்.

தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் 16 வகையான அபிஷேக தீபாராதனைகள் நடைபெறும். காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியையொட்டி "மாங்கனித் திருவிழா' நடைபெறும். ஆனி பௌர்ணமி அன்று இறைவன் வீதியுலா வரும்போது பக்தர்கள் கூடைகூடையாக வீட்டின் மேல்புறத்தில் அமர்ந்துகொண்டு மாம்பழங்களைக் கொட்டுவார்கள்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தின் 12 ராசிக்காரர்களுக்கு உரிய ராசி பலன்களை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 27ம் தேதி கடகம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - 04ம் தேதி மிதுனம் ராசிக்கும் 18ம் தேதி கடகம் ராசிக்கும் மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 15ம் தேதி ரிஷபம் ராசிக்கு மாறுகிறார்
சனி - 06ம் தேதி வக்ர கதியில் விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்தில் பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் 27ம் தேதிக்குப் பிறகு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் 04ம் தேதிக்குப் பிறகு கல்வி நிலை சிறப்படையும் 18ம் தேதிக்குப் பிறகு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை கொடுக்கல் வாங்கலில் சிக்கல் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் 06ம் தேதிக்குப் பிறகு மனதில் இனம் தெரியாத அழுத்தம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும் சம்பள உயர்வு உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமாக பேசுவதை தவிர்க்கவும் 27ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்படுவீர்கள் 04ம் தேதிக்குப் பிறகு பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் 18ம் தேதிக்குப் பிறகு எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும் 06ம் தேதிக்குப் பிறகு நண்பர்களால் நன்மை உண்டாகும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் சிறப்படையும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் 27ம் தேதிக்குப் பிறகு நிலம் வீடு வாங்கி விற்கும் தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபார முதலீடுகள் அதிகரிக்கும் 04ம் தேதிக்குப் பிறகு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் 18ம் தேதிக்குப் பிறகு வாக்குவன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாகனங்களை வாங்குவீர்கள். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளின் சேர்க்கைகள் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு ஆடம்பர செலவுகள் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும் 06ம் தேதிக்குப் பிறகு உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இடம் மாறுதல் உண்டாகும் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் 27ம் தேதிக்குப் பிறகு உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் 04ம் தேதிக்கு பிறகு தொழில் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டியிருக்கும் 18ம் தேதிக்கு பிறகு சமயோசிதமாக செயல்பட்டு அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்படும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் 15ம் தேதிக்கு பிறகு பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் 06ம் தேதிக்குப் பிறகு கலைகளில் நாட்டம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனப்போக்குவரத்தில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம் அதிகரிக்கும் 27ம் தேதி முதல் வீண் செலவுகள் அதிகரிக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 4ம் தேதி முதல் தொழில் வருமானம் அதிகரிக்கும் 18ம் தேதிக்குப் பிறகு தொழில் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தன வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் 06ம் தேதிக்குப் விவசாயத் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் எல்லா காரியங்களும் சிறப்படையும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 27ம் தேதிக்குப் பிறகு எண்ணங்கள் யாவும் நிறைவேறும். உங்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் 04ம் தேதிக்குப் பிறகு கமிஷன் தொழில் சிறப்படையும் 18ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 15ம் தேதியிலிருந்து அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வீட்டை வாங்குவீர்கள் 06ம் தேதிக்குப் பிறகு இடமாற்றம் உண்டாகும். ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம்.

துலாம்

துலாம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டாகும் காரியங்கள் அனைத்தும் சிறப்படையும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்களில் பங்கு கிடைக்கும் 27ம் தேதிக்குப் பிறகு தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும் 04ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுத் தொழில் தொடர்புகள் சிறப்படையும் 18ம் தேதியிலிருந்து கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும் 15ம் தேதிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் மனதில் குழப்பம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளினால் மன வருத்தம் உண்டாகும் தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மின்சார சாதனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை 27ம் தேதிக்குப் பிறகு மனதிலிருக்கும் பாரங்கள் தீரும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும் 04ம் தேதி முதல் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும் 18ம் தேதிக்குப் பிறகு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆசைகள் நிறைவேறும் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 15ம் தேதிக்குப் பிறகு கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும் பண வரவில் தடை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும்.

தனுசு

தனுசு

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பயணம் செல்லும் நிலை உண்டாகும் ஒப்பந்த தொழில் தொடர்புகளில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும் 27ம் தேதிக்குப் பிறகு வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் கஷ்டங்கள் உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபார வகையில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும் 04ம் தேதியிலிருந்து கமிஷன் வியாபாரம் சிறப்படையும் 18ம் தேதிக்குப் பிறகு தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் கையில் எடுக்கும் காரியங்களெல்லம் வெற்றியடையும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலை காவியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மந்தத் தன்மை தோன்றும் 06ம் தேதிக்குப் பிறகு அலைச்சல் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு பயணம் செல்லும் நிலை உண்டாகலாம். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்.

மகரம்

மகரம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு உத்தியோகத்தில் தொல்லை உண்டாகும் அலுவலக செயல்பாடுகளில் கவனம் தேவை. செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் கத்தி, கண்ணாடி போன்ற கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை 27ம் தேதிக்குப் பிறகு ரியல் எஸ்டேட் வியாபாரம் சிறப்படையும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் 04ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 18ம் தேதியிலிருந்து கமிஷன் வியாபாரம் மேன்மை நிலையை அடையும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும் வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள் 15ம் தேதிக்குப் பிறகு உல்லாசப் பயணம் செல்வீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சலை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சை தவிர்க்கவும்.

கும்பம்

கும்பம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும் 27ம் தேதிக்குப் பிறகு சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும் 04ம் தேதியிலிருந்து ஷேர் மார்க்கெட் முதலீடுகள் சிறப்படையும் 18ம் தேதிக்குப் பிறகு உறவினர்களால் தொல்லை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் எதிர்பார்க்காமல் பணம் கிடைக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் 15ம் தேதிக்குப் பிறகு வீட்டை அழகுபடுத்துவீர்கள். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் வீடு மனை வகையில் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடைபெறும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வாங்கி விற்க்கும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் 27ம் தேதிக்குப் பிறகு பிதுரார்ஜித சொத்துக்களிலிலிருந்து பங்கு கிடைக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும் 04ம் தேதிக்குப் பிறகு கல்வி நிலை சிறப்படையும் 18ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களின் உதவி கிடைக்கும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் வசீகரம் அதிகரிக்கும் 15ம் தேதிக்குப் பிறகு இடமாற்றம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் சிறப்படையும் செய் தொழில் நிலை சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rasi Palan for the tamil Month of Aani from 15-06-2017 to 17-07-2017.
Please Wait while comments are loading...