சனி பெயர்ச்சி பலன்.. ஏழரை சனி ஆரம்பம்.. மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரம் தொழில் எப்படி?
சென்னை: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது. விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என சனி பகவான் பயணம் செய்யப்போவதால் இந்த கால கட்டத்தில் பிசினஸ் ஆரம்பிக்கலாமா? தொழிலில் அதிக முதலீடு செய்யலாமா? 2024ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மீனம் விரைய சனி: சனிபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதி, 12 ஆம் அதிபதி. ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. காரணம் 12ஆம் வீட்டிற்கு அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது.

ஏழரை சனி: 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். அவர் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் கவனம் தேவை. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
நோய் கடன் பிரச்சினை: உங்களுடைய ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு தேடி வரும்.
வெளிநாடு: பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும்.
பொருளாதார நிலை: தொழில் முதலீடுகளில் அதிக அகலக்கால் வைக்க வேண்டாம். நிதானமாக செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் யாருக்கும் சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. தவறுகள் அதிகமாகின்றன. கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை நடைபெறும்.












Click it and Unblock the Notifications