Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி: கும்பத்தில் அஸ்தமனமான சனியோடு சேர்ந்த புதன்.. 30 ஆண்டுகளுக்குப் பின் திடீர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் சூரியன் உடன் இணைந்து இருக்கும் சனி அஸ்தமனம் அடைந்துள்ளார். மார்ச் 16ஆம் தேதி வரை அஸ்தமனமான நிலையில் பயணம் செய்யும் சூரியனுடன் இணைந்துள்ளார் புதன். கும்ப ராசியில் சூரியன் + சனி + புதன் சேர்க்கையால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு யாருடைய வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

சனி அஸ்தமனம்: சூரியனுக்கு அருகில் வரும் கிரகங்கள் அஸ்தமனம் அடைகிறது என்பது ஜோதிட விதி. செவ்வாய் சூரியனுக்கு 17 டிகிரி முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது. குரு 11டிகிரி இடைவெளியில் சூரியனுக்கு முன் பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது. சனி 15டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைகிறது. புதன் நேர்கதியில் 14டிகிரி வித்தியாசத்திலும்,வக்ர கதியில் 12டிகிரி வித்தியாசத்திலும் சூரியனுக்கு முன்பின் ராசிகளில் அஸ்தங்கம் அடைவார். சுக்கிரன் நேர்கதியில் 10டிகிரி முன்பின்னும், வக்கிர கதியில் 8 டிகிரியில் சூரியனுக்கு முன்பின் சஞ்சாரங்களில் அஸ்தங்கம் அடைவார்.

Sani Peyarchi Palan 2024: Sani+budhan+sun alliance with Kumbam Sani asthaman who gets sudden luck

எந்த கிரகங்கள் அஸ்தமனம் அடையும்: சுக்கிரனும் புதனும் சூரியனுடனேயே பயணிப்பதால் இவர்களுக்கு இந்த தோஷம் கிடையாது. ராகு கேதுக்கள் அனைத்து கிரகங்களை விட பலமானது எனவே அனைத்து கிரகங்களையும் சூரியனையும் சேர்த்து கிரகணம் அடைய செய்யும் இவற்றிற்கு அருகில் சென்றால் சந்திரனை பொறுத்த அளவில் சூரியனோடு சேர்ந்தால் அது அமாவாசை என்கிற ரீதியில் சென்று விடும் அப்படி எனில் இந்த அஸ்தமனம் என்பது சனி, குரு, செவ்வாய் இந்த மூன்று கிரகங்களுக்கு மட்டுமே முழுவீச்சில் செயல்படும்.

சூரியனோடு மிக நெருங்கி அஸ்தங்கம் ஆன கிரகத்தின் பலனை சூரியன் தன் திசையில் செய்வார் என்பதே ஆனாலும் அஸ்தமனம் அடைந்த கிரகம் தன்னுடைய காராக பாதிப்பை அடையும். சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட டிகிரியில் சனி அமரும் போது அவர் அஸ்தமனம் அடைவார். அவர் சனியை கடந்து செல்லும் போது அந்த குறிப்பிட்ட டிகிரியிலிருந்து விலகும் போது அஸ்தமன நிலை முடியும்.

சனியால் சங்கடம் இல்லை: அந்த வகையில் கும்பத்தில் இருக்கும் சனியுடன் சேர்ந்து உள்ள சூரியன் மார்ச் 14ஆம் தேதி வரை பயணம் செய்வார். சூரியன் சனியை நெருங்கிய போது கடந்த 11ஆம் தேதி முதல் சனி அஸ்தமனம் அடைந்தார். மார்ச் 16ஆம் வரை அஸ்தமன நிலையில் சனி பயணம் செய்வதால் இந்த கால கட்டத்தில் சனிபகவானால் பெரிய அளவில் கெடுபலன்கள் எதுவும் ஏற்படாது. இன்று முதல் கும்ப ராசியில் சனி சூரியன் உடன் புதனும் இணைந்துள்ளார். இந்த கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோகம் கிடைக்கப்போகிறது.

யாரெல்லாம் கவனம்: சூரியனும் சனியும் எந்த ராசியில், அல்லது எந்த ராசி கட்டத்தில் கூட்டாக இணைந்து சஞ்சரிக்கின்றன என்பதன் அடிப்படையில், அதன் காரகத்துவம் பாதிக்கப்படும். தற்பொழுது, கும்ப ராசியில் சனி அஸ்தமனமாக இருப்பதால், கும்ப ராசி பதினோராவது வீடு எனவே தொழில்துறையில் பிரச்சனைகள் ஏற்படும். அதோடு மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடவே அரசியல் தலைவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

கடகம்: சனி அஸ்தமான நிலையில் பயணம் செய்யும் இந்த காலத்தில் இந்த சனிபெயர்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சில ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் சற்று குறையும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் தாமதங்கள் நீங்கி, இந்த கால கட்டத்தில் நிம்மதியாக உணர்வீர்கள். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றால், மார்ச் 16 ஆம் தேதிக்குள் தொடங்கலாம். அதே நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் கணவன் மனைவி தவிர வேறு யாரையும் தலையிட அனுமதிக்க வேண்டாம்.

விருச்சிகம்: அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டுள்ள விருச்சிக ராசிக்காரர்களே..உங்களுக்கு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த பாதிப்புகள் குறையத்தொடங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் புது வீடு வாங்கும் யோகம் வரும் வண்டி, வாகனம் வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல யோகமான கால கட்டமாகும்.

மகரம்: ஏழரை சனியின் கடைசி கால கட்டத்தில் இருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு அஸ்தமான சனியால் கூடுதல் பலன்கள் கிடைக்கப்போகிறது. பாத சனி காலமாக உள்ள மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பாதிப்புகள் பாதியாக குறையும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களின் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் திடீர் புரமோசன் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும் நிதி நிலைமை மேம்படும்.

கும்பம்: ஜென்ம சனியால் பாதிக்கப்பட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பண விசயங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் என்றாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் கவனமாக இருப்பது அவசியம். பணத்தால் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள் ஒரு மாதகாலம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.

மீனம்: விரைய சனி காலத்தில் சிக்கியுள்ள மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். சனி அஸ்தமனம் அடைந்து பயணம் செய்வதால் வரும் மார்ச் 16ஆம் தேதி வரைக்கும் பண விரயம் குறையும் நிதி நிலைமை மேம்படும் பண வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய், கடன், வழக்கு பிரச்சினைகள் நீங்கப்போகிறது. மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+